12-12-2005, 06:44 AM
vasisutha Wrote:Aravinthan Wrote:90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது
அப்போ அவரது அப்பாவை இன்னும் காணவில்லையா?
அவருக்கு என்னவாயிற்று?
இன்று வரை குரும்பசிட்டிக்கு அருகில் இருக்கும் குப்பிளான் பகுதிக்கு ஒருவரும் செல்ல முடியாது. அவர் இன்னும் தனது தகப்பனைக் காணவில்லை. குப்பிளானின் மற்றைய பகுதியில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.கற்கரைப்பிள்ளையார் கோவில் வரை மக்கள் வாழ்கிறார்கள். கோவிலில் இப்பொழுதும் பூசைகள்,திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு அப்பால் சில இடங்கள் செல்லலாம். ஆனால் மக்கள் தங்க இராணுவம் அனுமதிப்பதில்லை. சிலர் ஊறங்குனை பகுதிவரை சென்று வருகிறார்கள். குப்பிளானில் இராணுவக் காவலரண்கள் ஒன்றும் இல்லை. ஆனால் பலாலியில் இருந்து இடைக்கிட ஆமி வந்து போகும். இப்பகுதியில் இருக்கும் வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளது. சில இடங்களில் வீடுகள் புற்களினால் முற்றாக மூடப்பட்ட நிலையில் உள்ளது.
,
,
,

