12-12-2005, 05:42 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு அங்கம் 13</b></span>
(முகத்தார் வெளி விறாந்தையில் படுத்திருக்கிறார் இந்த நேரம் சாத்திரி அங்கு வறார்)
சாத்திரி : என்ன முகத்தான் முகட்டைப் பாத்து யோசிச்சுக் கொண்டிருக்கிறாய் என்ன விசயம்?
முகத்தார் : அட..அட..டே சாத்தரியே வா.. . .வா . .இந்த வயசிலை என்னத்தை யோசிக்கிறது சும்மா படுத்திருக்கிறன்
சாத்திரி : பிள்ளையளை சொகுசா வெளியிலை அனுப்பிப்போட்டு தனியக் கிடந்து ஏன் யோசிக்கவேணும்
முகத்தார் : நான்மட்டுமே இஞ்சை கன பேரின்ரை நிலை இதுவாத்தானே கிடக்குது அது சரி இந்த வாழ்க்கையை விட்டுட்டு எங்களை குளிருக்கைப் போய் சாகச் சொல்லுறீயே
சாத்திரி : நல்ல சாட்டு உங்களுக்கு இந்த சொத்துப் பத்துகளை விட்டுட்டுப் போக மனமில்லை எண்டு சொல்லன்
முகத்தார் : இப்ப தனிய இருக்கிறது பிரச்சனையில்லை சாத்திரி வெளிநாட்டுக்காசு வரத் தொடங்க மனுசிக்காரியும் சோம்பேறியாப் போனாள் ஒருவேலையும் செய்யிறாள் இல்லை சாப்பாட்டை கூட கடையிலை எடுத்தா என்னவெண்டு கேக்கிறாள் எனக்கும் முந்தின மாதிரி வேலைசெய்ய உடம்பு விடுகுதில்லை
சாத்திரி : பின்னை 2 பேருக்கு என்னத்தை சமைச்சுக் கிழிக்கப்போறீயள் ஒரு வித்தியாசத்துக்கு கடையிலை சாப்பிட்டாத்தான் என்ன. . . ?
முகத்தார் : ஆனா சாத்திரி எங்கடை வயசுக்கு வருத்தங்கள் எங்கை எண்டு எட்டிப் பாக்குது இதுக்கை கடைச் சாப்பாட்டை திண்டு அதுக்கு வழி திறந்து விட்டமாதிரி போயிடுமே
சாத்திரி : அதுவெண்டால் உண்மைதான் ஆனா எங்கடை பெண்டுகளுக்கு இது விளங்குதில்லை என்ரை வீட்டிலும் இதே விளையாட்டுத்தான் என்ன செய்யிறது
முகத்தார் : எனக்குப் சமைக்கிறது பெரிய வேலையில்லை மனுசிகாரி ஒருசின்னசப்போட்டுத் தரலாம்தானே முந்தநாள் சட்டிபானை கழுவுறன் மனுசிக்காரி வந்து ஏதோ உதவி செய்யிறன் எண்டுட்டு பானை ஒண்டை எடுத்து கையிலை வைச்சு நிண்டநிலையிலை கழுவினா நான் சொன்னன் அம்மா. . பானையை கையிலை வைச்சு கழுவப்பிடாது எண்டு டக் எண்டு கையை விட்டுட்டாள் பானை நெருங்கிப் போச்சு பாத்தியளே கையிலை வைச்சுக் கழுவாட்டி இப்பிடித்தான் விழுந்துடையும் என்கிறாள் அப்ப என்ன செய்யிறது. . . .
சாத்திரி : முகத்தான் உன்ரை பிரச்சனை விளங்குது இப்பிடியான சின்னசின்ன வேலைக்கு ஒரு பிள்ளையை வீட்டோடை வைச்சிருந்தா நல்லம்தானே
முகத்தார் : பிள்ளையெண்டா நீ சொல்லுறது எனக்கு விளங்கேலையே
சாத்திரி : அதுதாண்டா வேலையாள் மாதிரி ஒரு பிள்ளையை வைச்சிருந்தால் தொட்டாட்டு வேலைகளுக்கு சுகம் எண்டு சொல்லுறன்
முகத்தார் : இந்தக்காலத்திலை எங்கை போய் இதுகளைத் தேடுறது
சாத்திரி : நீ ஓம் எண்டு சொல்லு எனக்கு தெரிஞ்ச ஒருஆள் இருக்கிறார் இந்த சுனாமியாலை பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அகதி முகாம்களிலை இருக்குத்தானே மனுசன் கொண்டு வந்து தரும்
முகத்தார் : சாத்திரி என்ன சொல்லுறாய் அந்த பாவப்பட்ட பிள்ளைகளை கொண்டு வந்து வேலை வாங்கிற அளவிலை என்ரை மனநிலை இல்லைக் கண்டியோ. .
சாத்திரி : முகத்தான் நீ ஏன் அப்படி நினைக்கிறாய் இஞ்சை எத்தனை பேர் முகாங்களுக்குப் போய் தங்கடை சொந்தக்கார பிள்ளை எண்டு கூட்டி வந்து வீட்டோடை வைச்சிருக்கினம்
முகத்தார் : அப்பிடி கூட்டிட்டு போற ஆட்கள் தங்கடை சொந்தப் பிள்ளை மாதிரிப் பாத்திச்சினம் எண்டால் பிரச்சனையில்லை இதை விட்டுட்டு தங்கடை பிள்ளைகளை ஒரு மாதிரியும் இந்தபிள்ளைகளை ஒருமாதிரியும் பாத்தால் அது கடவுளுக்கே அடுக்காது
சாத்திரி : முகத்தான் நீ நினைக்கிற மாதிரி தமிழ்ச் சனம் செய்ய மாட்டுதுகள் அங்காலை தென்னிலங்கைப் பகுதிலை நிறைய நடந்திருக்கு எண்டு அறிஞ்சன்
முகத்தார் : சாத்திரி எங்களுக்கு தெரியவரேலை எண்டு சொல்லு எங்கடை சனத்திலையும் இப்பிடி மனநிலையுள்ள ஆட்கள் இருக்கத்தான் செய்யினம் ஏதோ வெளிப்பகட்டுக்காக உதவி செய்யிறதெண்டு கூட்டிட்டுப் போய் பிறகு தங்கடை சுயரூபத்தை அந்த பிஞ்சிட்டைக் காட்டுவினம்
சாத்திரி : இப்ப அகதி முகாமிலை சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படுகிற இந்தப் பிள்ளைகளை தங்களோடை கூட்டிட்டுப் போய் சாப்பாடு குடுத்து வைச்சிருக்கிறதே பெரிய உதவிதானே
முகத்தார் : சாத்திரி குழந்தைகளுக்கு தனிய சாப்பாடு குடுத்தா காணுமெண்டு நீ நினைக்கிறாய் சின்ன வயசிலை அப்பா அம்மாவை இழந்த பிள்ளைகளின்ரை மனத்தாக்கத்தை அறிய வேணும் இப்பிடி கூட்டிட்டுப் போற ஆட்கள் தாங்களே அந்தப் பிள்ளைக்கு அப்பா அம்மாவா மாறி தங்கடை பிள்ளைகளோடை சரி சமனா நடத்தவேணும் அப்பிடி செய்தால்தான் அந்த பிள்ளைகள் சாதாரண நிலைக்கு வருவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு கண்டியோ. . .
சாத்திரி : எங்கையடாப்பா இப்பிடிச் சனம் செய்யப் போகுது சொந்த சகோதரத்தின்ரை பிள்ளையையே பிரித்துப் பாக்கிறதுகள் அந்த பிள்ளைகளையா பாக்கப் போகுதுகள்
முகத்தார் : அதுதான் சொல்லுறன் அப்பிடி மனநிலை இல்லாத ஆட்கள் பேசாமல் இருக்கிறதுதான் என்னதுக்கு பேருக்கு கூட்டிட்டு வந்து அந்த பிள்ளைகளை மேலும் காயப்படுத்த வேணும்
சாத்திரி : முகத்தான் அந்த காலத்திலை மலைநாட்டுப் பக்கம் வாத்தி தொழிலுக்கு போண சனம் என்ன செய்தது கஷ்ட்டப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்யிறதெண்டு இஞ்சை வீட்டு வேலைக்கு பிள்ளையளை கொண்டு வந்தவையெல்லோ
முகத்தார் : பாத்தியே படிப்புச் சொல்லிக் குடுக்கிற வாத்திமாரே பிழை விட்டிருக்கினம் பிறகென்ன. .
சாத்திரி : இதுக்கை ஓடருக்கு கூட்டி வந்து சொந்தக்காரருக்கு குடுத்த ஆட்களும் இருக்கினம்
முகத்தார் : சாத்திரி என்னைப் பொறுத்த மட்டிலை வீட்டிலை கஷ்;டமெண்டால் வேலைக்கு ஒரு ஆளை வைக்கிறது தப்பில்லை அதுக்காண்டி படிக்கிற பள்ளிக்கூடம் போற அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளை வைச்சிருக்கிறது மன்னிக்கமுடியாது
சாத்திரி : அட . . நீ ஏதோ கஷ்டப்படுகிறாய் உதவி செய்வம் எண்டு பாத்தன் இதுக்கு இன்னோரு வழியிருக்கு பொண்ணம்மாக்கா காதிலை போட்டியெண்டா நீ யொரு வேலையும் செய்யவேண்டி வராது அவவே எல்லாம் செய்வா. . .
முகத்தார் : அதென்ன ஜடியா சொல்லு பாப்பம் . . .
(இரகசியமாக முகத்தாரிடம் சொல்லி விட்டு சாத்திரியார் போகிறார்)
பொண்ணம்மா : என்ன சமையல் இன்னும் தொடங்காமல் கூட்டாளியோடை என்ன கதை வேண்டிக்கிடக்கு
முகத்தார் : ஒண்டுமில்லையப்பா இப்ப எல்லாம் முந்தின மாதிரி வேலை செய்ய உடம்பு ஒத்துவருகுதில்லை. அதுதான் சாத்திரியிட்டை சொல்லிக் கொண்டிருந்தனான்
பொண்ணம்மா : அதுக்கு என்னவாம் சொல்லிப் போட்டுப் போறார் கூட்டாளி. .
முகத்தார் : 25 வயசிலை ஒரு பெம்பிளைப்பிள்ளை இருக்காம் விருப்பம் எண்டால் சொல்லச் சொன்னான் சேர்த்து விடுகிறானான் எனக்கும் ஒத்தாசை இருக்கும்தானே நீர் என்ன சொல்லுறீர். . . .?
(பொண்ணம்மாக்கா எதுவும் பேசாமல் அறைக்குள் போய் சிறிது நேரத்தில் திரும்பி வாறா)
முகத்தார் : இப்ப எங்கையப்பா சீலையை உடுத்துகொண்டு கிளம்பிட்டீர். . . ?
பொண்ணம்மா: இருங்கோ வாறன் ஒருக்கா முனியம்மாவைச் சந்திச்சுப் போட்டு. . . .
முகத்தார் : (மனசுக்குள்) அப்பா சாத்திரி இண்டைக்கு மட்டும் மாட்டினா. . சங்குதான்டீ உனக்கு. . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>