12-09-2003, 09:52 AM
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் அண்மைக் காலமாக ஏற்படும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்ட hPதியில் பல அசம்பாவிதங்கள் மேற்கொள்ளப்படுவதை அறியக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை என தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் படுகொலை செய்யும் ஒருவித திட்டமிட்ட நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
இத்திட்டமிட்ட நடவடிக்கைகளை பெருமளவில் புலிகள் மீது பழி சுமத்தும் ஒரு ஆபத்தான செயற்பாடும் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் திருமலையில் ஒரு கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு முஸ்லிம்களும், கிண்ணியாவில் வயற்காவலுக்குச் சென்ற மூன்று முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதட்ட நிலை காணப்பட்டது.
இது இவ்வாறு இருக்க, இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.
இவ்வாறான படுகொலை செயற்பாட்டை மேற்கொள்ளும் குழு யார் என்பதை இதுவரை இனம் காணமுடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
ஆனால் இந்த செயற்பாடுகளையடுத்து முஸ்லிம் காடையர்களில் சிலரை ஏவி தமிழ் மக்களை தாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை அவதானிக்கும் போது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு மோதலை து}ண்டும் ஒரு குழுவின் செயற்பாடு என்பதையும் அந்த குழுவிற்கு இன்னும் இந்த செயற்பாட்டில் வெற்றி கிட்டவில்லை என்பதையும் எவரும் இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களே பரவலாக பேசிக் கொள்ளும் அளவிற்கு முஸ்லிம் குழுவொன்றே இத்தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாகவும் அந்த குழுவிற்கு முஸ்லிம் அரசியற் கட்சிகளின் ஆதரவும், அனுசரணையும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முஸ்லிம் கட்சியும் அந்த கட்சியில் இருக்கும் சில அரசியல் தலைவர்களும் இந்த மோதலைத் து}ண்டிவிட்டு பின்னர் தாங்கள் முன்வந்து அதனைத் தங்களது தலையீட்டின் மூலமே தணிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடுகளைக்காட்டி அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர்.
ஆனால் இந்த ஆபத்தான அரசியல் நாடகத்தில் அப்பாவி முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களுமே கொல்லப்படுகின்றனர்.
இதனை முஸ்லிம் மக்கள் சரியான வகையில் இனம் கண்டு கொள்ளாதபட்சத்தில் அவர்கள் பெரும் ஆபத்தை எதிர் கொள்ளப்போவதோடு கிழக்கு மாகாணத்தில் அமைதி என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது சுயபாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்தவேண்டும் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
இதனை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியும் அதில் உள்ள குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுமே இதனை வெளிப்படுத்துகின்றனர். இவையெல்லாம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களின் பின்னணியோடு தொடர்புபட்டதாக இருக்குமோ என்ற ஐயமும் பரவலாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுப்பப்படுகிறது.
இவை கிழக்கு மாகாணத்தை பல்வேறு துண்டுகளாக கூறு போடத்துடிக்கும் சிங்கள பேரினவாதிகளின் செயற்பாடு களை அங்கீகரிப்பவர்களின் வேலையென்பதை முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தெளிவாகவே கிழக்கில் புரிந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நல்லுறவை சீர்குலைக்கும் குழுக்களை இனம் கண்டு கிழக்கு மாகாணத்தில் அமைதிநிலை ஏற்பட தமிழ் மக்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்கள் பாடுபடவேண்டிய தேவை உள்ளது.
ஏனென்றால் புலிகளால் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் புலிகள் முஸ்லிம் கட்சிகளோடு மட்டுமல்லாது, முஸ்லிம் மதத்தலைவர்க ளோடும் முஸ்லிம் பிரமுகர்க ளோடும் பல சந்திப்புக்களை மேற்கொண்டு ஏற்படுகின்ற சிற்சில பிணக்குகளும் தீர்வு கண்டு வருகின்றனர்.
இவ்வாறான சந்திப்புக்களின் போது புலிகள் முஸ்லிம் அரசியல் கட்சி பிரமுகர்களோடு நடத்திய சந்திப்புக்களில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை விட முஸ்லிம் மதத்தலைவர்களோடும் பிரமுகர்களோடுடனானதுமான சந்திப்புக்களின்போது ஏற்படுகின்ற இணக்கப்பாடுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இவையெல்லாம் கிழக்கு மாகாணத்தில் பல தாக்கங்களை வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துபவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவையும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அனர்த்தங்களுக்கு காரணம்.
இவ்வாறுதான் முன்னர் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் அம்பாறையில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்ட போது அதனை புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டதோடு, பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் பின்னர் அந்த கடத்தல் பின்னணியில் முஸ்லிம் குழுவினரின் சம்மந்தம் இருப்பதாக புலன் விசாரணைகளில் தெரியவர அப்படியே அந்த கடத்தல் நாடகம் கைவிடப்பட்டது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அசம் பாவிதங்களின் பின்னணியில் பெருமளவு முஸ்லிம் குழுக்களும், அதனை ஊக்குவித்தவாறு சிங்கள பேரினவாதிகளும் இருப்பதும் பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனை சரியாக புரிந்து கொள்ளாது தமிழ் மக்கள் மீதும், புலிகள் மீதும் குற்றம் சுமத்துபவர்கள் உண்மைகளை புரிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்வார்களா?
நன்றி: ஈழநாதம் 05-12-03