Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முஸ்லிம்
#23
சிறிலங்கா சனாதிபதி சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை, சமாதான நடவடிக்கைகளை புறந்தள்ளியுள்ள நிலையில் அதனை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி, முற்றாகவே அமைதி நடவடிக்கைகள் யாவற்றையும் செயலிழக்க வைக்கும் தனது அரசியல் மூலோபாயத்தை சனாதிபதி மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு செயற்படுத்திவருகிறார் என்பதையே அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் நிரூபித்து வருகின்றன.

மூன்று பிரதான அமைச்சுக்களை சந்திரிகா தன் வசப்படுத்திக்கொண்டதையடுத்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்கும் ஐ.தே.முன்னணி அரசு பெரும்பாலும் முற்றாகவே அதிகார வலுவற்ற பொம்மை அமைச்சரவை ஒன்றைக் கொண்டதாக மாறிவிட்டது.

இந்த நிலையில் ரணில் வெறுமனே ஒரு ~றப்பர் முத்திரை| பிரதமராக எத்தனை நாளைக்குத்தான் பதவியில் இருக்கமுடியும். இத்தகைய ஒரு நிலை அவரது அரசியல் ஆளுமைக்கு தகுந்த ஒன்றாக அமையாது என்பதுடன் அவரது எதிர்கால அரசியல் வாழ்வையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதும் உண்மையே.

இதை ரணில் நன்கு அறிவார்.

அதேசமயம் சந்திரிகாவின் இலக்கும் அதுவேயாகும்.

ரணிலின் அரசியல் ஸ்திரத்தன்மையை, அரசியல் செல்வாக்கை எத்தகைய ராஜதந்திரத்தை அல்லது சட்டபுூர்வ அரசியல் சதியை, பயன்படுத்தியேனும் சிதைப்பது சந்திரிகாவின் முக்கிய நோக்கமாக இருந்த அதேசமயம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப்பேச்சுவார்த்தையை ஆதரிப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதனை நிரந்தரமாக ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு செல்வதும் அவரின் திட்டமாகவும் இருந்தது.

இத்திட்டத்தின் மற்றொரு பக்கம் இன்னொரு அரசியல் சதியை இனவாத இலக்குடன் மேற்கொள்வதாகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுதலும் அவசியமாகும்.

அதாவது கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களிடையே பகைமை மற்றும் மோதல் உணர்வை, சமூக விரோத சக்திகளையும். தேசவிரோத தமிழ்க் குழுக்களையும் பேரினவாத வெறியர்களின் வழிகாட்டலில் செயற்படவைத்து அதிகரிப்பதும் சனாதிபதியின் தலைமையிலான பொ.ஐ. முன்னணியினரின் மறைமுகமான திட்டமுமாகும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவரிடையேயான நட்புறவும், பாரம்பரியப் புரிந்துணர்வும், பேரினவாதத் தலைமைகளின் மித்திரபேதத் தந்திரோபாயங்களால் கடந்த மூன்று தசாப்தங்களாக பெருமளவு சிதைவடைந்து இருதரப்பினருக்குமிடையே ஒரு விதமான பகையுணர்வு வளர சிங்களத் தலைமைகள் கையாண்ட யுக்திகள் பலவாகும். வடக்கிலும், கிழக்கிலும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும், ஏனைய மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்குமிடையே மத hPதியிலான முரண்பாடுகள் என எதுவுமே தலைது}க்கியதில்லை. இருதரப்பினரிடையே தாய்மொழியும் தமிழாக அமைந்திருந்தமையானது மத வேறுபாடுகளுக்கப்பால் இரு இனத்தவரிடையேயும் பரஸ்பர நல்லுறவு ஏற்படக் காரணமாகவும் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் தமிழ் என்ற மொழியால் இறுக்கமான உறவு - உணர்வுகளைப் பேணிவருவது பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு ஒரு போதுமே உடன்பாடாக இருந்தது கிடையாது. இந்த உறவு இறுக்கமானால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் இனத்தவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து ஒரு பெரிய வலிமையான சக்தியாகி சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானதும் ஆபத்தானதுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு சில தசாப்தங்களின் முன்னரே ஏற்பட்டுவிட்டது.

பண்டாரநாயக்கா முதல் - சந்திரிகாவரை சிங்களத் தீவிரவாத தலைவர்களும் காலத்திற்கு காலம் அவர்களின் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளின் அவசியத்தின் நிமித்தம் தமிழ் அரசியல்வாதிகளிடையே - அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி. பிளவுகளை ஏற்படுத்தி, முரண்பாடுகளை வளர்த்ததன் மூலம் சிறுபான்மையின் ஒருமித்த உரிமைக்கான போராட்ட உணர்வை நன்கு திட்டமிட்ட வகையில் சிதைத்தனர்.

குறிப்பாக முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கிடையே பதவிப் போட்டியை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கியதன் பின்னணியில் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரமான கைகள் இருந்தன.

இவையொன்றும் அந்தத் தலைமைகளுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் பதவி வெறியும், போட்டியுணர்வும் இன ஒருமைப்பாட்டையே சிதைத்து தங்களுக்குள்ளேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு அவமானகரமான வகையில் மோதிக்கொள்ளவே வழிவகுத்தது.

இஸ்லாமியத் தமிழ் தலைமைக்குள் எப்படி பேதங்களை உருவாக்கினார்களோ அதே வழியில் தமிழ் தலைமைகளுக்கும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தலைவர்களுக்குமிடையே எத்தகைய நல்லுறவும் ஏற்படவிடாதும் பார்த்துக் கொண்டார்கள்.

நாட்டின் இனப்பிரச்சினையை இதற்கு அவர்கள் பயன்படுத்திய விதம் ஒரு துரோகத் தனமான சதியாகும்.

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே இனத்துவ முரண்பாடுகளையும் மோதல்களையும், சமூக விரோத சக்திகளையும், கூலிப்படைகளையும் பயன்படுத்தி, சர்வதேச உளவு அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கிணங்க சிங்கள அரசியல்வாதிகள், பேரினவாத அமைப்புகளின் அனுசரணையுடன், ஏற்படுத்திய விதம் இரு தரப்பினரிடையேயும் நிரந்தரமான பகைமையுணர்வை விதைப்பதையே இலக்காகக்கொண்டதாகும்.

இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் இதற்கு பலியானவிதம் மிகவும் பரிதாபகரமானதாகும்.

தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அதேபோல் ஒரு கட்டம் வரும் போது, இஸ்லாமியத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் அரசு ஒடுக்கவே செய்யும் என்ற சிந்தனையோட்டமும் தொலைநோக்கு யோசனையும் இரு தரப்பு தலைமைகளுக்கும் இருந்தது கிடையாது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது இஸ்லாமியத் தமிழர்களின் உரிமைகளுக்குமான போராட்டம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவிடாது சிங்கள பேரினவாதம் அவர்களை பதவிப்பதர்களாக்கி விட்டது துயரமான விடயமே.

இன்று கிழக்கில் நடைபெறும் வன்முறைகளின் பின்னணியில் இயங்கும் அரச சார்பு, சமூக விரோத சக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவு ஏற்படுவதை சிதைப்பதையே ஒரே இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதை இஸ்லாமியத் தலைமைகளும், அடிப்படை மதவாத அமைப்புகளும் சிந்திக்க தவறிவிட்டன.

கிழக்கின் அசம்பாவிதங்களுக்கு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டும் சந்திரிகாவின் இரத்தக் கறை படிந்த கரங்களின் கொடூரத் தினை உடத்தலவின்ன படுகொலைகளின் போதாவது முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இன்று நடைபெறும் வன்முறைகளின் பின்னாலும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறை கரம் ஒன்று வேறு சில வெளிச்சக்திகளின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன் செயல்படுகிறது என்பது உண்மையாகும்.

இந்த மறைகரம் இனம் காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தநாட்டின் சமாதான முயற்சிகளைச் சிதைப்பதும், விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்வதும், தமிழ் - இஸ்லாமியத் தமிழ் மக்களிடையேயான உறவுகளைத் தகர்ப்பதும் தான் இந்த பேரினவாத வழிகாட்டலுடனான மறைகரத்தின் ~திருப்பணி| என்பதை இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் தமது பதவிப் பற்றின் காரணமாக இனங் காணத் தவறின் - இஸ்லாமியத் தமிழர்களை பெரும் அவலங்களுக்குள் தள்ளி விடும் வரலாற்றுத் தவறை புரிந்த குற்றம் அவர்களுக்குரியதேயாகும்.


நன்றி: ஈழநாதம் 05-12-03
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 06:42 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:57 PM
[No subject] - by kuruvikal - 11-04-2003, 06:21 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 06:52 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 01:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 11-10-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-11-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 06:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-12-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-12-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-13-2003, 12:44 PM
[No subject] - by sethu - 12-09-2003, 09:51 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:15 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:17 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)