12-11-2005, 09:22 PM
kuruvikal Wrote:மோகன் தாஸ் உண்மை உணர விரும்பிற கதை புனைபவராக இருந்தால்..இவற்றை ஆரோக்கியமாக புரிந்துணர்வோடு உள்வாங்கி இங்கு வருவார்...! ஆனால் அவரின் வரவு தனது படைப்புத் தொடர்பில் தமிழினியின் வரிகளுக்கு பதில் சொல்வதையே நோக்காகக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை..! அதுக்கு இத்தனை முழக்கம் ஏனோ..????! மோகன் தாஸை வரவேற்பதிலும் களத்தில் மற்ற உறவுகளைக் கடித்துக் குதற ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிட்டே என்று கருத்தெழுதுவதே இங்கு நடக்கிறது...! நிச்சயமாக மோகன் தாஸின் வரவில் களத்தோடு தொடர்ந்து கருத்தாடும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை..! தனது ஆக்கத்துக்கு வந்த கருத்துக்கு தன் பதிலை பதிவு செய்துவிடுவதே அவரின் தேவை இங்கு....!![]()
![]()
![]()
தமிழினி எழுதினதை ஏதோ விரட்டிக் கலைக்க வைச்ச கருத்து என்றது போல காட்டி..அதில் நல்லதும் பொல்லாததும் பேசிட்டு இருக்கினம்...அது சிலுக்கிட கண்ணுக்குப் புலப்படேல்லையோ..! இப்படித்தான் இங்க.. எங்க ஒரு எதிர்விமர்சனம் வந்தாலும் கொஞ்சப் பேர் கிளம்பிடுவினம்...தங்கல நிலைநிறுத்திட..!
சிலுக்கு இங்க எழுத புத்தியிலும் அவதானம்தான் முக்கியம்..! அதைப் புரிஞ்சு கொள்ளுங்கோ..! குருவிகளுக்கு புத்தியிலும் இங்க உள்ளவை பற்றி போதிய அவதானம் இருக்கு..! :wink:
mohandoss Wrote:வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)
அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.
முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
mohandoss Wrote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.
மற்றொன்று என் கதைக்கான விமரிசனத்தை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன். நான் என் மென்டரைப்பற்றி கூறிப்பிட்டது. விமரிசனங்களுக்கு படைபாளன் நேரடியாக பதில் சொல்லக்கூடாது அதற்கும் அவன் படைப்புக்களையே உபயோக்கிக்க வேண்டும் என்பதுதான். நான் நேரடியாகபதில் சொல்லவந்ததைப்பற்றி தவறாக நினைக்கவில்லை.
தமிழினி ஒரு இடத்தில் நான் 100% என்று கூறிப்பிட்டதில் உள்ள நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டதால் எனக்கு என் மென்டர் சொன்ன வரிகள் பற்றிய உண்மை விளங்கியது.
இது பெரும்பாலும் நேருவதே. மற்றபடிக்கு உங்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும், விமரிசனங்களுக்கும் நன்றி. நான் நிறைய படிக்கவே விரும்புவே. அதிகமாய் எழுதுவதையல்ல, ஆனாலும் தமிழ் சம்மந்தப்பட்ட ஒரு குழுமத்தில் (எனக்கு தெரிந்தவரை) என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் என் நேர அவகாசத்தைப் பொறுத்தே. என் ப்ளாக் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம் நான் முழுநேர எழுத்தாளன் கிடையாது. எனக்கென்று தனியாக கணிணித்தூறையில் வேலையுள்ளது. இடையில் என்னாலான முயற்சியாய் என் மனிதில் பட்டதை பதிவிட்டு வருகிறேன். நிச்சயமாய் என் பங்களிப்பு யாழ் களத்திலும் இருக்கும்.
வணக்கம் குளக்காட்டான்..! உங்கள் ஒப்பீட்டுக்கு நன்றிகள்..!
ஒரு புதிய உறுப்பினரின் அறிமுகம் பகுதியிலான அறிமுகத்தை மோகந்தாஸ் தந்தது சம்பிரதாயத்துக்கு... களக்கட்டாயத்துக்கு...!
முதல் பதிவே வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டது..! இல்லை என்கிறீர்களா..???! அவரின் வரவின் நோக்கம் என்பது பற்றியதே நாம் சொன்னது.! அவரின் வரவின் நோக்கம் தவறென்று சொல்லவில்லையே..! களத்தின் மீது இங்குள்ள தமிழின் மீதான ஆர்வத்தில் இல்லை என்பதாகவே ஆரம்பம் தொட்டு தென்பட்டது அதையே சுட்டிக்காட்டினோம்..!
பின்னர் அவரே தனது வரவின் நோக்கம் பற்றிச் சொன்ன பின்னர்...திரிபு என்று நீங்கள் எதைச் சொல்ல முனையிறீர்களோ நமக்குப் புரியவில்லை..!
குருவிகளின் கருத்து வந்த பின்னர் மோகன் தாஸ் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துவிட்டார்..மீண்டும் சம்பிரதாயத்துக்கு...யாழில் தனது ஆக்கங்கள் இடம்பெறும் என்றிருக்கிறார்..! இடம்பெறுமா என்பது கேள்விக்குறி..! நடந்தால் வரவேற்போம்..! ஆனால் தற்போதைய அவரின் நோக்கம் யாழில் இணைந்து கருத்தாடுவதல்ல..தனது கதைக்கு வந்த ஒரு கதைக்கு பதில் சொல்வது..! அதை அறிமுகத்தில் தொடராமல்...இங்கு தொடர ஏன் முடியவில்லை...???! இதை அவரே ஒப்புக் கொண்ட பின்னர் குருவிகளை நீங்கள் கருத்துத் திரிபாக்கி என்பது குருவிகள் மீது ஏதோ ஒரு குற்றத்தை சுமத்திவிட நினைப்பதாகவே கருதுகின்றோம்...!
உங்கள் பதிவிலேயே ஒரு கற்பிதம் இருக்கிறது குளக்காட்டான்..அதாவது குருவிகள் எழுதித்தான் மோகந்தாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கலாம் என்பது...! அப்படியானால் அது உங்கள் பக்க கருத்துத் திரிபா..மோகந்தாஸ் சொல்லேல்லையே குருவிகள் பற்றி எதுவும்...!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

