Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயிற்சி
#1
சிலரின் கருத்துக்கள் உங்களை கோபமடையச்செய்கிறதா?இதோ அந்த கோபத்தை தணிக்க சில பயிற்சி முறைகள்.

1) கதிரை ஒன்றில் அமைதியாக அமருங்கள்.
2) வாயை சுவிங்கம் மெல்வது போல் அசையுங்கள். ஒரு நிமிடத்திற்கு.
3) சுவிங்கம் மெல்வது போல் வாயை அசைத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள். ( கண்கள் வலிக்கும் வரை)
4)சுவிங்கம் மெல்வது போல் வாயை நன்கு அசைத்தபடியே கண்களை திறவுங்கள்.
5) வாயை சுவிங்கம் மெல்வது போல் அசைத்தபடியே கண்களைச்சுற்றி விரல்களால் தட்டுங்கள்.
6) வாயை சுவிங்கம் மெல்வது போல் அசைத்தபடியே மூக்கின் எலும்பு பகுதியையும் தட்டுங்கள்.
7)சுவிங்கம் மெல்வது போல் வாயை அசைத்தக்கொண்டே நெற்றிப்பகுதியின் பள்ளத்திலும் விரல்களால் தட்டுங்கள்.
8) சுவிங்கம் மெல்வது போல் வாயை அசைத்தபடியே மீண்டும் கண்களை இறுக மூடி தலைப்பாகத்தை இறுக்கிக்கொள்ளுங்கள்.
9)பின்னர் அதே போல் கன்னங்களையும் இறுக்கிக் கொள்ளுங்கள்.
10) கழுத்தை மெதுவாக அசைத்துக்கொள்ளுங்கள்.அப்படியே தோழ் மூட்டுப்பகுதியையும் அசையுங்கள்.
11)உடல்பகுதி தசைப்பகுதிகளை அப்படியே தொய்ய விடுங்கள்.
12)கைகளையும் அப்படியே தொய்ய விடுங்கள்.
13)தொடைப்பகுதி தசைகளையும் அப்படியே தொய்ய விடுங்கள்.
14) முழங்காலுக்கு கீழ் உள்ள தசைப்பகுதிகளையும் தொய்ய விடுங்கள்.
15) கால் பாதங்களை மெதுவாக அசையுங்கள்.
பாதத்தையும் அப்படியே தொய்ய விடுங்கள்.
உங்களை அறியாமலே பல கொட்டாவிகளை இச்செய்கையின் போது விட்டிருப்பீர்கள். இறுதியில் கைகளை உயற்தி உடலை நன்கு நீட்டி கொட்டாவி விடுவீர்கள். (அதாவது உடலை முறுக்கெடுப்பது என கூறுவார்கள். அதே போல் செய்வீர்கள்.) இப்படி செய்வதனால் உங்கள் கோபம் கலையும் அலுப்பு சோர்வு பறக்கும். புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். செய்து பாருங்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
பயிற்சி - by nalayiny - 12-08-2003, 10:40 PM
[No subject] - by manimaran - 12-08-2003, 11:15 PM
[No subject] - by nalayiny - 12-08-2003, 11:40 PM
[No subject] - by shanmuhi - 12-09-2003, 08:29 AM
Re: பயிற்சி - by Selan - 12-09-2003, 10:16 PM
[No subject] - by vasisutha - 12-10-2003, 04:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)