12-11-2005, 12:42 PM
Quote: தமிழினி
உங்கள் மேல் பிரியமும் மரியாதையும் எனக்கு உண்டு.
அந்த விதத்தில் என் கருத்தை பற்றி கொஞ்சமாவது சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
அதனால் எழுதுகிறேன்.
நன்றி அண்ணா.
Quote:
உங்களைப் போன்றவர்களால்தான் பிரச்சனை உண்டாகிறது என்று உங்கள் மேல் பழி போட மாட்டேன்.
உங்களைப் போல் பலர் சிந்திக்க உங்கள் வினாக்களுக்கு
இங்கே விடை கிடைக்கின்றன.
அதையாவது ஏற்றுக் கொள்வீங்களா?
ஆமாம் கேள்வி கேட்பதே விடையறியத்தானே.
Quote:
இங்கே எழுதப்பட்டது ஒரு கதை.
அதைக் கதையாக ஏற்றுக் கொள்வது வாசகர் கடமை.
இது ஒன்றும் இலங்கையின் சரித்திரமில்லையே?
ஒரு எறும்பு கடிச்சா முழு எறும்பையும் கொல்ல மருந்து அடிக்கிறாங்க.
அந்த ஜீவன் பேசினா நிச்சயம் என்ன பேசும் தெரியுமா?
...................................
ஒரு சிலர் செய்த ஒன்றுக்காக பல அப்பாவிகள் பலியாவது தர்மமில்லை.
இது
பலருக்கு புரிவதே இல்லை.
இங்கு பாண்டியத்தை விட
மக்களோடு பழகும் பக்குவம்தான் பெரிது.
உண்மை தான் அண்ணா அது சரித்திரம் அல்ல. கதை தான் அதை நாம் கதையாக ஏற்றுக்கொண்டதால் தான் கருத்து வைத்தோம். அந்த எழுத்தாளர் தனது பார்வையில் ஒரு ஆக்கத்தை வைத்தார். அதே ஆக்கத்திற்குரிய எங்களது பார்வையை வாசகர் என்ற ரீதியில் நாமும் வைத்தோம். சிறந்த ஒரு எழுத்தாளனிற்கு அடையாளமே விமர்சனங்களை எதிர்கொள்வது தான். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு படைப்பு வெளிவந்து சாதிக்கப்போவது எதை.?
அந்த வகையில் மோகனதாஸ் தானாக முன்வந்து எங்கள் கருத்தைக்கேட்டுச்சென்றார். இது ஒரு சிறந்த படைப்பாளிக்கு எடுத்துக்காட்டு ஒரு படைப்பிற்கு ஆதரவான கருத்து மட்டும் தான் வரும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?
ஆனால் எம்மில் பலர் அதை ஏற்க மறுப்பது வேதனை தான் உதாரணத்திற்குப்பாருங்கள். மோகனதாஸ் என்னிடம் கேள்வி கேட்ட இடத்தில் மற்றவர்கள் அந்த ஆக்கம் பற்றிய தங்கள் கருத்தை வைத்துச்செல்ல ஒரு சிலர் ஆக்கம் பற்றிக்கருத்து வைத்த என்னைப்பற்றிக்கருத்து வைத்துச்சென்றார்கள். இவைகள் நகைப்புக்குரியவை. விமர்சனங்கள் தான் ஒரு ஆக்கத்தின் அதிசிறந்த பரிசு என்று கூறலாம்.
இத்தனை பேர் அந்தக்கதையை அக்குவேறு ஆணி வேறாக விவாதிப்பது அந்த ஆக்கத்தின் ஒரு விதவெற்றியே.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

