Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலைகள்-03 ல் இராணுவம் மூன்று நாட்களிற்குள் ஓட்டம்
#1
விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது தமது பெறுமதியான ஆயுதத் தளபாடங்களையெல்லாம் கைவிட்டு இராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர் என சிறிலங்கா இராணுவத்தில் முதல்தர அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கா, நவம்பர் முதலாம் திகதி 1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது நடைபெற்றவை தனக்கு ஞாபகமிருப்பதாகத் தெரிவித்திருப்பதோடு,

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிரதேசகள் அனைத்தையும் கைவிட்டு இராணுவத்தினர் மூன்று நாட்களிற்குள் முழுமையாக ஓட்டம் பிடித்தனர் என்றும், இதன் போது தமது பெறுமதியான ஆயுதத்தளபாடங்களைக் கூட அப்படியே விட்டுவிட்டே ஓடினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு போராட்ட காலத்தில் 45,000 படையினர் படைகளை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 13, 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 18 மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றது என்பதோடு, இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சதுரமைல் பிரதேசத்தில் பல பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள், கட்டளை மையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாரிய ஆயுத தளபாடங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்கள், ராடார்கள் மற்றும் யுத்த டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களைக் கூட கைவிட்டு சண்டை தொடங்கியதும் இராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர் என்பதும்,

மேற்படி ஜெயசிக்குறு ஆயுத தளபாடக் கையிருப்பு மற்றும் ஆனையிறவுத் தளபாடக் கையிருப்பு என்பன சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த ஆயுத வலுவில் 40 விழுக்காடு தொகையைக் கொண்டிருந்தவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அன்றைய காலகட்டத்தில் ஒரு இராணுவ ஆய்வாளர் தெரிவிக்கையில்,

சிறிலங்கா அரசாங்கம் தான் இழந்ததைத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தாங்கள் கைப்பற்றியதைத் தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசு இழந்த யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் நீண்டதூர ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் மரபுப்படையணிப் பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவற்றை விடுதலைப் புலிகள் பாவிக்க ஆரம்பிப்பார்களானால், வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் இருப்பு கேள்விக் குறியாக்கிவிடும் எனத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
Reply


Messages In This Thread
அலைகள்-03 ல் இராணுவம் மூன்று நாட்களிற்குள் ஓட்டம் - by நர்மதா - 12-11-2005, 10:41 AM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 10:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)