12-11-2005, 03:56 AM
tamilini Wrote:sathiri Wrote:அஜீவன் நீங்கள் தவறுதலாக கலவரம் நடந்த ஆண்டை 1981என்று தட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அது 1983 யுலை என்பதே சரி
நன்றி சாத்திரி.
மேலே திருத்தி விட்டேன்.
என் தவறை சுற்றிக் காட்டிய விதத்தில் சாத்திரி மேல் எனக்கு அன்பு பிறக்கிறது.
அவரும் அதே நிலையில்தான் எனக்கு சொல்கிறார்.
இதே போல் பல முறை எனக்கு நடந்திருக்கிறது.
அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
இது தாழ்வான ஒன்றல்ல.
மேலான ஒரு செயல்.
சிறு குழந்தை கூட நம் தவறை சொல்லலாம்.
திருத்திக் கொள்ள மனசு வேண்டும்.
அது மேலோர் குணம்.
உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை திட்டிக் கூட
ஒரு கதை என்ன
புராணமே எழுதலாம்.
ஒரு ஈழத் தமிழனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக் கூடாதென்று அடம் பிடிப்பது எதைக் காட்டுகிறது?
இங்கே எழுதப்பட்டது ஒரு கதை.
அதைக் கதையாக ஏற்றுக் கொள்வது வாசகர் கடமை.
இது ஒன்றும் இலங்கையின் சரித்திரமில்லையே?
ஒரு எறும்பு கடிச்சா முழு எறும்பையும் கொல்ல மருந்து அடிக்கிறாங்க.
அந்த ஜீவன் பேசினா நிச்சயம் என்ன பேசும் தெரியுமா?
...................................
ஒரு சிலர் செய்த ஒன்றுக்காக பல அப்பாவிகள் பலியாவது தர்மமில்லை.
இது
பலருக்கு புரிவதே இல்லை.
இங்கு பாண்டியத்தை விட
மக்களோடு பழகும் பக்குவம்தான் பெரிது.

