Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
15 நாட்களே நீடித்த வைராக்கியம்?
#1
மகிந்தவின் சிந்தனைக்கேற்ப சமாதான ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படுவதற்கு ஜே.வி.பி தடையல்ல என்பது போன்ற கருத்துக்களை அது முன்வைக்கத் தொடங்கியுள்ளது. இது அடிப்படையில் கேலிக்கிடமானது.....

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக கூக்குரல் இடுவதற்கும், சிங்கள அரசியல் தலைவர்கள் எதையும் கூறுவதற்கும் செய்வதற்கும் தயங்குவதில்லை என்பது வரலாற்றுப் பாடம். ஏனெனில் சிங்கள மக்களின் ஞாபக சக்தி குறித்தும், சிங்கள மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு நிரம்பவே உண்டு.
.....
............
யுத்த நிறுத்த உடன்பாட்டில் கைச்சாத்திட்ட ரணில் விக்கிரமசிங்கவும் சரி, அதன் பின்னர் யுத்த நிறுத்த
உடன்பாட்டை தொடர்வதாக அறிவித்த சந்திரிகா குமாரதுங்கவும் சரி தற்பொழுது யுத்தநிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைக்கப் போவதாகக் கூறும் மகிந்த ராஜபக்ஷவும் சரி யுத்தநிறுத்த உடன் பாட்டிலும், சமாதான முயற்சிகளிலும் காட்டிய, காட்டும் கரிசனையைவிட இராணுவத் தீர்வில் காட்டிய, காட்டும் கரிசனை அதிகமாகும்.

அவர்கள் தமக்கு வாய்ப்பான சூழ்நிலை வரும் வரையில் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை. ஏனெனில் அவர்களின் சிந்தனை அவர்களின் கூட்டாளிகளின் நோக்கங்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதையோ சமாதான வழியில் தீர்வு என்பதையோ கொண்டதாக இல்லை.
http://www.tamilnaatham.com/editorial/eela...am/20051210.htm
Reply


Messages In This Thread
15 நாட்களே நீடித்த வைராக்கியம்? - by kurukaalapoovan - 12-10-2005, 03:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)