12-08-2003, 03:33 PM
இரவு நேரம்- சினிமாப்படத்திற்கு குறைவில்லை! பழைய புதிய படங்கள் எண்டு நல்லாதான் இருக்குது. வார இருதி நாடகள்pல் நம்மவர் தொலைக்கட்சிகளில் நமது ஊர் நிகழ்ச்சிகள் வந்து போகிறது. இதில் ஒரு தொலைக்காட்சி நமது நிகழ்ச்சிகளை போடவேணும் எண்டதிலை வலு அக்கறையாக இருக்கினம். நல்லது, ஆனால் அது அனைத்து நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் ஒரு 20 விதம் தான் உள்ளது. அனால் அதில் முக்கியமான ஒரு விடயம் இந்த புலம் பெயர் சமூகத்தின் பிரச்சனைகளை மையமாக வைத்து நடைபெறும் நிகழ்ச்சிகள் வலு குறைவு! மொத்தத்தில் தென்னிந்திய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய வித்தியாசம் இல்லை. ஏதோ சாட்டுக்கு கொடுப்பது போல தானே இருக்கு! தாயக நிகழ்ச்சிகளை பாரக்கும் சந்தோசத்தை ஒரு தொலைக்காட்சி அதிகவில் தந்தாலும் புலம் பெயர் மக்களின் நிகழ்ச்சிகள் வீதம் அதிலும் கூறைவாகவே உள்ளது. ஒரு தொலைக்காட்சி நம்மடை பிரச்சனைகளை கதைக்கினம். அவையின்றை காட்டை வாங்கி தான் அதுவும் கதைக்கலாம். நல்லது நல்ல வியாபார தந்திரம். ஆனால் எல்லாரினதும் கருத்தை அது பிரதிபலிக்க வைக்குமா? கோயிலரகளை பற்றி விளாசினார்கள், ஆனால் அந்த நிகழ்ச்சியை நடாத்துபவர் ஏதோ சண்டியன் மாதிரி நிண்டது இன்னமும் என் கண்களை உறுத்துது. சிரிச்சா ஏதோ குறைஞ்சுபோவினம் எண்ட மாதிரி இருந்தது. அடுத்த பியரர் கான் மடக் மடக் மடக்! சனலை மாத்தினால் அங்காலை பழைய படம். சனி, ஞாயிறு கிழமை வடிவாக ஓய்வெடுக்கிற நாளோ என்னவோ உதுகளை பார்த்த அசதியில் பகலே நல்ல நித்திரை. செய்திகள் பற்றி பாரப்பம். தென்னிந்திய தொலைக்கட்சியில் ஒரு அம்மா இழுத்து செய்தி வாசிக்கிறதை விவேக்கெ நக்கலடித்திருக்கிhர். அதைநேரில் கேட்ட போது செய்தியை விட அது நல்ல நகைச்சுவையாக இருந்தது. நம்மவர் தொலைக்கட்சிகள் அனைத்திலும் அதாவது அனைத்திலும் செய்திகள் கடுமை, ஆக்களும் கடுமைஈ அதாவது செய்தி வாசிப்பவர்கள் - இதற்கு முக்கிய காரணம் இது பற்றிய பயிற்சி இன்மையே! பிரபலமான செய்தி ஸ்தபானங்கள் தமது செய்திகளை வாசிப்பவர்களுக்கு கடும் பயிற்சி கொடுப்பார்கள் - குறிப்பாக கண் தொடர்பாடல், அங்க அசைவுகள் உச்சரிப்பு. அது மட்மல்ல உலக செய்திகள் பற்றிய அறிவை வளர்க்கும் வாசிப்புகள், கலந்துரையாடல்கள் அடிக்கடி நடை பெறும். உதாரணத்திற்கு ஒரு செய்தியில் ஒரு புதிய அரசியல் வாதி பற்றிய செய்தி வருகிறது என்றால். செய்தி வாசிப்பவருக்கு அவர் பற்றிய முழு தகவல்களையும் கொடுப்பாரகள். முந்தி ஒருக்கா ஒரு வானொலியில் கோபி அனானை கோப்பி அண்ணான் என்று கூறினார்கள். நானும் அறிவு குiறுஞ்சனான் உதுகளை கேட்டுதான் அறிவு வளர்க்கிறனான். நானும் அவரை கோப்பி அண்ணான் என்றே அழைத்தேன். பிறகு ஒரு நாள் வேறை ஒரு வானொலியிலை கோவி அனான் என்டிச்சினம், கடைசியா கோப்பி அண்ணனை கோவில் அண்ணையாக மாத்த முந்தி அந்த அறிவிப்பாளரை மாத்தீட்டினம். நான் இதை சொல்ல வந்த காரணம், செய்திகளை வாசிப்பவர்களின் தரம் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை புரிய வைக்கவே. செய்திகளை சொல்பவர்கள் அதை மிக ஒழுங்காக பிழையின்றி சொல்ல வந்ததை அழகாக விழங்கிற மாதிரி சொல்ல வேண்டும். நமக்கு ஊடகங்களாக இருந்து அறிவுப்பசியை தீர்ப்பவர்களே பட்டினி கிடந்தவர்கள் எண்டால் எங்கடை நிலைமை? நல்லா வாசிக்கிறவை வேணுமெண்டால், கந்த புராணம், பைபிள், குரான் இது களை வாசிக்கலாம். ஆனால் செய்தி வாசிப்பவர்கள் வாசிக்கும் திறமை மட்டும் உள்ளவர்களாக இருக்க கூடாது, அந்த துறை பற்றிய அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் பெயரை வாசிக்கும் போது குறைந்த பட்சம் அந்த நா பற்றிய ஒரு பொது அறிவாவது இருக்க வேண்டும். ஒருமுறை செய்தி வாசிக்கும் ஒருவரை நான் சந்தித்து உரையாடும் போது பெருவை பற்றி ஏதோ கதை வந்து விட்டது. அந்த நபருக்கு பெரு எந்த கண்டத்தில் இருக்கெண்டே தெரியாது. இதைபற்றி அவரும் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. நாம் முக்கியமாக இந்த ஊடகங்களை பார்ப்பது பொழுது போக்குக்காக மட்டுமல்ல உலக நடப்பு ஊர் நடப்பு பற்றி அறியவே, ஆனால் அதை செய்திகளாக நமக்கு வழங்கும் அந்த அறிவிப்பாளர்களே இதில் மந்தமாக இருந்தால் நமது கதி? ஒவ்வரு வானொலி தொலைக்காட்சியிலும் ஒரு புத்திஜீவி இருப்பார். அவர்தான் எல்லாவற்றிற்கும் குரு, செய்திகள் சேகரிப்பது முதல் தயாரிப்பது வரை அவரே! பாவம் அவருக்கு நிச்சியம் இது பற்றி விளங்கப்படுத்த நேரமிருக்காது, ஆனால் அதைப்பற்றி அறியும் நோக்கம் கூட இந்த செய்தி வாசிப்பவர்கள் சிலருக்கு இல்லாமையே மிகவும் கலைக்கிடமானது. நம்மடை தொலைக்காட்சிகள் வளர இன்னும் எவ்வளது து}ரம் இருக்கு, ஆனால் அது வளருமா என்ற கேள்வியுடன் தான் நான் நேற்று தொலைக்காட்சி நிகழ்சிகளை பாரப்பதை முடித்தேன். கடைசில் ஏதோ ஒருவெறுமையுடன் அங்கில சனல் ஒன்றில் அருமையான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன். சரி நம்மாலை நல்லா செய்யத்தான் முடியேல்லை உதுகளை கொப்பியடிக்கவுமா முடியேல்லே? அதை தானே இந்த தென்னிந்திய தொலைக்காட்சிகளும் செய்யுது? ஆதங்கத்துடன் ….

