12-10-2005, 12:39 PM
நான் கூட ஆரம்பத்தில் தமிழீழக்காதல் என்ற தலையங்கத்தைப் பார்த்ததும் ஏதோ தாயகத்தில் நடைபெற்ற காதலோ என எண்ணியபடி வாசித்தேன். ஆனால் கதையின் ஆரம்பத்திலிருந்த கதாசிரியரின் நிலைக்கும் பின்பு சொரூபன் அவரது சகோதரி ஆகியோர் மூலம் போராட்டத்தின் மற்றைய கோணத்தை கதாசிரியர் புரிந்தபின் அதன் மேல் அவர் கொண்ட பற்று ( உதாரணமாக வைரமுத்துவின் கவிதை பற்றிய விளக்கம் ) தமிழீழம் மேல் அவரைக் காதல் கொள்ள வைத்திருக்கலாம். ஆனால் கதையில் அவர் முக்கியமாக சுட்டிக்காட்ட முனைந்தது உணர்வு புூர்வமான காதலையே!!!!!

