Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ?
#1
நெஞ்சைத்தொட்டது ஏன் நெருப்பாய் சுட்டது ?

ஒர்; உண்மைச்சம்பவம். செவிகளில் நுழைந்தவுடன் சிந்திக்கதோன்றியது. நான் அறிந்த கேட்ட அந்த உண்மையான உதிரக்கசிவை உங்களிற்கும் தரத்தோன்றியது தருகின்றேன். நேரமின்மை. அதனால் முழமையாக எமுதி தரமுடியவில்லை. பாகம் பாகமாக தரமுயல்கின்றேன். கவிதையாகவும் கதைவடிவிலும் தரமுயல்கின்றேன்.

ஆணில் தவறா பெண்ணில் தவறா ? விடை அறியவில்லை. அவசரம் செய்தவள் அவளாயின் தவறெல்லாம் அவள் பக்கம் ஆசைப்பட்டது அவனாயின் முழுத்தவறும் அவன் பக்கம். முழமையாக வாசித்தபின் உங்கள் பக்க நியாயங்களை இங்கே பகிருங்கள்.

அந்திமாலை ஆர்ப்பரிக்கும் சாலை
பைய நடந்து பாதங்கள் நோவ
மெல்ல தரையமர்ந்தேன்
சாலையோரப்புூங்கா அது
புூவையர் தம் தாய்மைகாட்டிய செல்வங்களுடன்
கரம் கோர்த்த கணவருடனும்
வாழ்வை வசமாக்கி
வையகம் மறந்து களித்திருக்கின்றனர்

எங்கு நோக்கினும் இரட்டையராய்
எங்கும் பரந்த பசுமையினுள்
வானவில் கலவைகளாய்
வண்ணச் சிட்டுக்கள்

தனிமரமான எனக்கு
தோப்புகள் நிறைந்த புூவனம்
மேனியெங்கும் இதுவரை
பரவாத இன்பம் தந்தது
விழியால் மேய்ந்தபடி
என் வேதனைகள் களைந்தபடி
வீற்றிருந்த என் பார்வையினுள்
து}ரத்தே ஓர் உறவு
ஓற்றையாய் என்னைப்போல

பலமணிநேரமாய் எதிலுமே
பிரக்ஞையற்று பகலைத்தொலைத்த
இரவுபோல விழியெங்கும் ஏக்கத்துடன்

நீண்டநேர அவர் தனிமை
என்னை அவர்பால் ஈர்த்தது
அருகில் சென்றேன்
வதனம் கண்டேன்
தமிழ் வாசம் பெற்றேன்
வாடி நின்றாலும்
வாசமிழக்காதவன் தமிழன்
சோர்ந்து நின்றாலும்
சோடை போகாதவன் தமிழன்

வணக்கம் என்றேன்
வானம் தொலைத்த நிலவினை
மாய்ந்து மாய்ந்து தேடுவார்போல
என் முகத்தை ஏற இறங்க நோக்கி நின்றார்
ம் ம் என்றார்
அர்த்தம் பொதிந்த பதிலாய்

நேரம் கிடைக்கும்போது தொடர்கின்றேன்.
[b] ?
Reply


Messages In This Thread
நெஞ்சைத்தொட்டது ஏன் ந - by Paranee - 12-08-2003, 03:03 PM
[No subject] - by shanmuhi - 12-09-2003, 08:39 AM
[No subject] - by shivadev - 12-16-2003, 07:02 PM
[No subject] - by shanmuhi - 01-05-2004, 05:10 PM
[No subject] - by shivadev - 01-05-2004, 05:59 PM
[No subject] - by Paranee - 01-13-2004, 09:26 AM
[No subject] - by sOliyAn - 01-13-2004, 09:58 AM
[No subject] - by Paranee - 01-13-2004, 12:58 PM
[No subject] - by Paranee - 01-21-2004, 05:34 AM
[No subject] - by kuruvikal - 01-21-2004, 11:27 AM
[No subject] - by Mathivathanan - 01-21-2004, 02:09 PM
[No subject] - by Paranee - 01-21-2004, 02:30 PM
[No subject] - by kuruvikal - 01-21-2004, 04:08 PM
[No subject] - by Mathivathanan - 01-21-2004, 04:13 PM
[No subject] - by kuruvikal - 01-21-2004, 04:24 PM
[No subject] - by Paranee - 01-21-2004, 04:32 PM
[No subject] - by Mathivathanan - 01-21-2004, 07:22 PM
[No subject] - by Mathivathanan - 01-21-2004, 07:54 PM
[No subject] - by shanthy - 01-21-2004, 07:55 PM
[No subject] - by sOliyAn - 01-21-2004, 11:54 PM
[No subject] - by Mathivathanan - 01-22-2004, 09:25 AM
[No subject] - by sOliyAn - 01-22-2004, 01:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)