12-10-2005, 07:42 AM
ஜீவனின் கருத்துத்தான் என்னுடையதும் இந்திய இராணுவம் செய்த அட்டுழியங்களை வைத்துக் கொண்டு தமிழ் நாட்டு மக்களை நாங்கள் எமது போராட்டத்துக்கு எதிரானவர்கள் எண்டு எண்ண இயலாது சிலருக்கு சரியான விளக்கமில்லாமல் சும்மா பத்திரிகை செய்திகளை பாத்து எமது போராட்டத்தை எடை போடுகிறார்கள் இந்த விடத்தில் தமிழ் நாட்டு உறவுகள் களத்தில் வரும் போது எம்மால் இயலுமானவரை இவர்களுக்கு புரிய வைக்க முற்படவேணும் சும்மா இந்திய இராணுவம் செய்ததுகளை வைத்து அவர்களுடன் கருத்து மோதுவதில் எதுவுமில்லை ஆரம்பக்காலங்களில் எமது போராளிகளுக்கு உதவி செய்தவர்கள் ஈழத்து மக்களை விட தமிழ் நாட்டு உறவுகளே என்பதை நாம் மறக்க கூடாது ஜீவன் சொன்னது போல இங்கு நாம் சேர்க்கும் தமிழ் ஈழ சம்மந்தமான நிதிகளுக்கு தேடி வந்த வந்து உதவி செய்யும் தமிழ் நாட்டு உறவுகளை எனது சொந்த உறவாகத்தான் பார்க்கிறேன்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

