12-10-2005, 02:27 AM
மோகன்தாஸ் தனது கதையில் மனதில் பட்டதை அப்படியே யதார்த்தமாக எவ்வித கலப்புமின்றி சொல்லியுள்ளார். உண்மையில் அஜிவன் என் மனநிலையை நீங்களும் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இந்தியத் தமிழ் மக்கள் எங்கள் நிலையை புரிந்து கொள்ள வேண்டுமென்று ஆதங்கப்படும் நாம் எத்தனை பேர் அவர்களை முழுமையாக புரிந்து வைத்துள்ளோம். எமக்காவது சிங்கள அரசுடன் தான் பிரைச்சினை ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா இப்படியே பல பிரைச்சினைகள். இவ்வளவிற்கிடையிலும் எம்மில் அக்கறை கொண்டவர்களை நாம் மதித்தே ஆக வேண்டும். தவறுகள் இருப்பின் இங்கிதமாக சுட்டிக் காட்டுவோம்.

