12-09-2005, 11:51 PM
Quote:ஏற்கனவே வரவேற்பு பகுதியில் எழுதிவிட்டு வந்தால் இங்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:22pt;line-height:100%'>வணக்கம் மோகன்தாஸ்.
முதற்கண் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
கடந்த பதிவுகளையும்
உங்கள் பதிவில் எழுதியிருந்த அசல் கதையையும்
அங்கே பலரது வியப்புகளையும்
உங்கள் நிலையையும் என்னால் உணர முடிந்தது.
முதலில் உங்கள் படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
அடுத்து
நீங்கள் அந்த சம்பவங்களை உங்கள் நிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.
இலங்கையை அல்லது இலங்கை தமிழரைத் தெரியாத ஒரு இந்திய குடிமகனின் மனோ நிலையை அங்கே பார்க்கிறேன்.
அங்கே பொய் இல்லை.
மனதுக்கு பட்டது எழுத்தால் ஒரு படைப்பாகியுள்ளது.
நாங்கள் ஐரோப்பாவுக்கு வரு முன் வெள்ளைக்காரர்கள் எல்லோருமே ஆங்கிலம் பேசுபவர்கள் என்றே கருதினோம்.
<b>வெள்ளைக்காரங்கண்ணா இங்கிலீஸ்காரங்க.</b>
ஆனால் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்த போது எல்லோரும் வெள்ளையர்கள்தான்.
ஆனால் அவர்கள் எந்த நாடு என்று புரிந்து கொள்ளவே எமக்கு பல வருடங்கள் ஆகின.
நான் வாழ்வது சுவிஸ் நாட்டில்............
நான் வாழும் பகுதியின் மக்கள் ஜேர்மன் மொழி பேசுகிறார்கள்.
அந்த ஜேர்மன் மொழி கூட அசல் ஜேர்மன் மொழி அல்ல.
சுவிஸ் ஜேர்மன் மொழி.
நான் மொழி புரியாத நிலையில் இருந்த போது ஒரு வேலைக்கு போனேன்.
அங்கே இருந்த வெள்ளை நிறத்தவர்கள் என்னோடு பேசியது ஜேர்மன் மொழியில் என எண்ணினேன்.
சில வாரங்களுக்கு பின்தான் தெரிந்தது
அவர்கள் பேசியது ஜேர்மன் மட்டுமல்ல இத்தாலி பிரெஞ்சு ரொமானிஸ் போர்த்துகல் துருக்கி யூகோஸ்லாவிய ................என பல மொழிகள் என.........
அவை மாத்திரமல்ல .
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே உங்கள் மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறீர்கள்.
அது முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர் கடமை.
இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரை கிடையாது.
உங்கள் வாழ்வோடு நெருங்கிய இதயத்தில் உறைந்து விட்ட ஒரு அன்பு நினைவு............
<b>ஆட்டோ கிராப்</b>
நானும் பெங்களூரில் வாழ்ந்தவன் எனும் நிலையில்
ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி மோகன்தாஸ்.
இது ஒரு வகையில் அடுத்த உறவுகளையும்
உங்களையும் யாழ் களத்தையும் இணைக்க நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.
பெங்களூர் சிவாஜி நகரில் 1987-1990கள் வரை தமிழ் ஈழ ஆதரவு மையமொன்று இருந்தது.
அதன் முகப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் <b>பிரபாகரனின்</b> பெரிய கட்அவுட் ஒன்று இருக்கும்.
அங்கே ஈழ விடுதலை சம்பந்தமான அனைத்து புகைப்படங்களும் புத்தகங்களும் இருந்தன.
அந்த மையத்தில் எப்போதும் இளைஞர்களை பார்ப்பேன்.
<b>இது போதும்............... </b>
சிவாஜி நகர் என்பது ஒரு குட்டித் தமிழ்நாடுதான்.
நான் இக் கால கட்டத்தில் கன்னடப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அதனாலேயே அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன்.
லாட்ஜில் பல தமிழர்கள் வேலை செய்தார்கள்.
அக்காலத்தில் இலங்கை இராணுவத்துடன்
இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் யாழ் கோட்டையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
சுடச் சுடச் செய்திகள் பத்திரிகைகளில்...........
பத்திரிகையைத் தூக்கிக் கொண்டு ஓடி வரும் தமிழர்கள்
உணர்ச்சி பொங்க அவற்றை வாசித்து மகிழ்வார்கள்.
அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
<b>புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?</b>
இவர்களது கேள்விக்குள் இருந்த தாகத்தை
என்னால் அன்று உணர முடியவில்லை.
ஒருநாள் அதிகாலை என் லாட்ஜ் முன்னால் வெடி கொழுத்தும் சத்தம்.
எழுந்து கதைவைத் திறந்தால்
தமிழர்கள் ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்ன விசேசம் என்று கேட்டேன்.
<b>சார்.......விடுதலைப் புலிகள் கோட்டையை புடிச்சிட்டாங்க சார்.
கொடி நாட்டியாச்சு.
தமிழனுக்கு ஒரு நாடு கிடைச்சுட்டுது சார்.</b>
என்று மாதவன் என்ற தொழிலாளி
என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
என் கண்கள் குளமாகின.
........................................
எம்.ஜீ.ஆர் படங்களில்
கோட்டையில் கொடி நாட்டினால் அந்த நாடே நமக்கு சொந்தம்
என்ற மனக்கணக்குடன் இவர்கள் வாழ்ந்திருந்தது மாதவனது பேச்சு எனக்கு உணர்த்தியது.
அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
என் மனக் கண்ணில் வந்து போனது........
<b>புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?</b>
இன்று நாமெல்லாம் ஏதேதோ பேசுறோம்.
கொஞ்சம் யோசித்து பேசுவோம்.
<b>இந்திய அரசு என்பது வேறு.
இந்தியாவில் வாழும் தமிழ் ஈழ நேச மக்கள் என்பது வேறு?</b>
பக்கத்தில் இருந்த சிங்களவனையே புரிய முடியாதவங்க.........
வேறொரு................. :?:
மீண்டும் நன்றி மோகன்தாஸ்.
உங்கள் பதிவிலும் எழுதியிருக்கிறேன்.
</span>
Quote:"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."
முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.
உங்களால் மட்டுமல்ல பலரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயத்தை பார்த்து அச்சமடைந்தீருக்கிறீர்கள்.
<b>உண்டியல்</b> என்பது
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு ஊருக்கோ நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வழி பணம் அனுப்புவது.
அதாவது
உங்கள் கதைப்படியே பார்த்தால்
ஜேர்மனியில் இருக்கும் சொருபனின் உறவினர் ஒருவர் ஜேர்மனியில் இருக்கும்
ஒரு இந்திய நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ 500 டாலர் அல்லது யூரோ கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதே பணத்துக்கான இந்திய மதிப்பீட்டுத் தொகையான 27122/- ரூபா பணத்தை ஜேர்மனியில் இருக்கும்
இந்திய நண்பரின் உறவினர் ஒருவர் மூலமாகவோ அல்லது நண்பர் மூலமாகவோ இந்தியாவில் கொடுப்பார்கள்.
அதாவது (இன்றைய ரேட் 1 = 54.24 படி 500 = 27122 ரூபா -
http://www.oanda.com/convert/cheatsheet ல் பார்க்கவும்)
இப்படியான பணமாற்று முறைகளை அதிகமாக மேலத்தேய நாடுகளில் இருக்கும் ஆசிய வியாபார நிறுவனங்களே செய்கின்றன. பல நாடுகளில் ஒரே நிறுவனத்தின் கிளைகள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தில் கொடுக்கும் பணத்தை மற்றொரு நாட்டு நிறுவனத்தில் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்........
புரியாதவனுக்கு சிம்ம சொப்பனம்தான்.
இது ஒன்றும் பெரிய ஹவாலாப் பணம் கிடையாது.(திருட்டு பணம் கிடையாது.)
இதை அனுப்ப கடைக்காரர்கள் கொஞ்சம் பணம் அறவிடுகிறார்கள்.
வங்கியில் பணம் அனுப்பினால் ஒரு வாரம் பத்து நாள் என இழுபடும்.
இப்படி அனுப்பும் போது ஒரே நாளில் இவர்களால் இந்தியாவில் உள்ள கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம்.
சிலரால் வங்கிக் கணக்குகளை திறக்க முடியாமல் இருக்கும் போது யாராவது ஒரு நண்பர்கள் மூலமாக அவர்கள் வங்கிக்கு பணம் அனுப்புவதுண்டு.
உங்கள் கதையில் இப்படியான விளக்கங்கள் இல்லாமை
<span style='font-size:16pt;line-height:100%'>(அதாவது இது பற்றிய தெளிவின்மையால்......../ இது தவறல்ல.)
ஏதோ கிரிமினல் குற்றவாளிகளாக அப்பாவிகளை நீங்கள் பார்த்ததாக காட்டுகிறது.
அதைக் கூட கலப்படமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
தவறு செய்யாத மனிதர்கள் இல்லை.
உங்களுக்கு சில விடயங்கள் தெரியவில்லை.
வார்த்தைகளின் அர்த்தம் கூட
கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.
Quote:சுவிஸ் ஜேர்மன் மொழியில் <b>\"கோபம்\"</b> என்று பாவிக்கப்படும் சொல்
ஜேர்மன் மொழியில் <b>பைத்தியம் / லூஸ்</b> என்று அர்த்தப்படுகிறது.
இது கூட புரியாம பேசினா லூஸுதான்.
மேலதிமாக விபரம் தேவைப்படின் எழுதுங்கள்.
பதில் தரக் காத்திருக்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகள்...........
அன்புடன்
அஜீவன்
Switzerland
www.ajeevan.com
கீழேயுள்ள கதை கூட உங்களை சிந்திக்க வைக்க உதவலாம்.
http://ajeevan.blogspot.com/2004/12/blog-p...st.html[/color]

