12-09-2005, 11:36 PM
அதெப்படி பூனைக் குட்டி இப்படி ஒருவரை நல்லாத் தெரின்சமாதிரி எழுதுறியள்?அது சரி உங்களுக்க ஆயிரம் இருக்கும் நான் உந்த வம்புக்கு வரேல்ல.
அதோட நான் களத்தில அவதானித்த வகையில் ,இந்தியத் தமிழர்களைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறு எம்மவர் மத்தியில் இந்திய இராணுவத்தை ,மத்திய அரசை மையமாக வைத்து வைக்கப் படுகிறதோ அவ்வாறே இந்தியத் தமிழர்களின் மதிப் பீடுகளும் தமது சொந்த அனுபவங்களின் ஊடாகவே வைக்கப் படுகின்றன.இதற்கு முக்கிய காரணம் எமக் கிடயில் தொடர்பாடலோ அன்றி போக்கு வரத்துக்களோ இல்லாததே காரணம்.இணயம் அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது.அதனால் தயவு செய்து இங்கு வரும் இந்திய நன்பர்களுடன் பக்குவமாக நடந்து எமது பக்க நியாயங்களை எடுத்துரைப்போம்.அத்தோடு வரும் நண்பர்களும் இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழர் பட்ட இன்னல்களால் தான் இவ்வாறான இந்திய வெறுப்புணர்வு சிலரிடம் இருகிறது என்பதை புரிந்து கொண்டு கருத்தாடவும்.இங்கு பலருக்குத் தெரிந்த இந்தியா சினிமாவும் ,தமிழ் நாட்டு அரசியலும் தான்.ஈழத் தமிழருக்காக தீக்குழித்த தமிழ் நாட்டுத் தமிழரயோ அன்றி ஆரம்பகால இராணுவப் பாசறைகளுக்கு உதவி செய்த தமிழர்களயோ அறியார்.
நாம் இந்திய மத்திய அரசின் கபடத் தனத்தை அம்பலப் படுதும் அதே வேளை தமிழ் நாட்டுத் தமிழ் மக்களிடம் எமது பக்க நியாத்தை நிதானமாகச் சொல்ல வேண்டும்.இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவோமாகில் ,எமக்கு எதிராக தமிழ் நாட்டில் செய்யப் பட்டு வரும் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அது அமையும்.
மோகன தாஸ் என்ன சொல்லுறீங்க?