Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது
#1
<img src='http://www.dailythanthi.com/images/news/20051208/ish.jpg' border='0' alt='user posted image'>

ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது


மும்பை,டிச.8-

பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் காதல் முறிந்துவிட்டது.

காதல்

நடிகை ஐஸ்வர்யாராயும் நடிகர் விவேக் ஓபராயும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது.

ஐஸ்வர்யாராயை முதலில் நடிகர் சல்மான் கான் காதலித்து வந்தார். ஆனால் அவர் அடிக்கடி ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு குடிபோதையில் சென்று தகராறு செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது காதல் முறிந்துவிட்டது.

அதன் பிறகுதான் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதல் தீவிரம் அடைந்தது.

தாயார் எதிர்ப்பு

ஆனால் ஐஸ்வர்யாராய்-விவேக் ஓபராய் காதலை ஐஸ்வர்யாராயின் தாயார் விரும்பவில்லை.

மேலும் ஐஸ்வர்யாராய்க்கு 32 வயதாகிவிட்டது. ஆனால் விவேக் ஓபராய் வயது 29 தான்.

ஐஸ்வர்யாராய் திருமணத்தை விரைவில் நடத்த அவரது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் விவேக் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்த பின்னர் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். இதையும் ஐஸ்வர்யாராயின் பெற்றோர்கள் ஏற்கவில்லை.

பகிரங்கப்படுத்த விரும்பவில்லை

மேலும் திருமணத்துக்கு முன்னதாகவே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று விவேக் ஓபராய் வற்புறுத்தினார். இதை ஐஸ்வர்யாராய் ஏற்கவில்லை.

இதேபோலத்தான் தனது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திய சல்மான் கானை ஐஸ்வர்யாராய் உதறித்தள்ளினார்.

காதலர்களாக இருப்போம் ஆனால் அதை பகிரங்கமாக மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம் என்று விவேக் ஒபராயிடம் ஐஸ்வர்யாராய் கூறினார். இதற்கு விவேக் ஓபராய் சம்மதிக்கவில்லை.

கடைசி நிகழ்ச்சி

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் ஒரு நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராயும் விவேக் ஓபராயும் கை கோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். அது தான் அவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஆகும்.

அதன் பின்னர் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு அதிகம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யாராய் ஆங்கில படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.

அப்போது நடிகர் விவேக் ஓபராய் தனது நண்பர்களிடம் மிக வருத்தத்துடன் ஐஸ்வர்யாராய் தனது காதலை பகிரங்கமாக அறிவிக்க மறுத்த தகவலை கூறி வேதனைப்பட்டார்.

பிரிந்தனர்

இது போன்ற காரணங்களினால் இனிமேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்பதை அறிந்த அவர்கள் காதலை முறித்துக்கொண்டு பிரிந்து விடுவது என்று தீர்மானித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யாராய் -விவேக் ஓபராய் ஜோடி பிரியப்போகிறது என்று இந்தி பட உலகில் பேசப்பட்டு வந்தது.

இப்போது இந்த காதல் ஜோடியின் பிரிவு வெளிப்படையாகி விட்டது.
Reply


Messages In This Thread
ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது - by aathipan - 12-08-2005, 09:35 PM
[No subject] - by Danklas - 12-08-2005, 09:42 PM
[No subject] - by விது - 12-08-2005, 10:30 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 01:15 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 01:17 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:21 PM
[No subject] - by kuruvikal - 12-09-2005, 01:33 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 01:36 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:39 PM
[No subject] - by kuruvikal - 12-09-2005, 01:39 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 01:40 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:44 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 01:46 PM
[No subject] - by தீபா - 12-09-2005, 01:49 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:52 PM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 01:55 PM
[No subject] - by தீபா - 12-09-2005, 02:33 PM
[No subject] - by SUNDHAL - 12-09-2005, 02:40 PM
[No subject] - by aathipan - 12-09-2005, 09:42 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 09:46 PM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 04:39 AM
[No subject] - by sinnappu - 12-12-2005, 12:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)