12-08-2005, 08:09 PM
ஞாபம் வருது ஞாபகம் வருது.. நாங்களும் இப்படி பங்கருக்குள் காலம் போக்கியிருக்கிறம். சில வேளை பங்கருக்குள் பு}வரசுச்சருகுடன் தேள் இருந்து கடிச்ச நினைவுகளும் உண்டு. ஆமி எப்ப அடிப்பான் என்ற நேரங்கள் தெரிந்து சனம் அந்த நேரம் பங்கருக்கு கிட்டவாய் நிற்பது வழமை. ஆமி முன்னேறி தென்மராட்சிப்பக்கம் வாறான் என்று சனம் எல்லாம் ஒன்றாய் கோவில் வழிய இரவுகளில் தங்கிய சந்தர்ப்பமும் உண்டு. தனிய இருந்தா அம்பிட்ட படி சுடுவான் வெட்டுவான் என்ற பீதி தான். அதன் பிறகு வன்னியில் நாங்கள் பங்கர் வெட்டவில்லை. பெரிய பெரிய மரங்கள் அதிகம் இருந்தது நாங்கள் இருந்த இடத்தில் மரங்களில் மறைந்து கொண்டோம்.. செல்லடியல்ல கிபீர் தான் நமக்கு கரைச்சல் அதனால்மரம் பாதுகாத்துக்கொண்டது. ஆனால் இப்பவும் ஏதாவது விமானம் மேலால் சென்றால் மனப்பதட்டத்துடன் நிமிர்ந்து பார்ப்பதுண்டு பழைய நினைவுகள் மறந்து போகாமல்இருக்கிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

