12-08-2005, 04:42 PM
பொதுவாக தவறு செய்யும் மனிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.
ஆனால் கோழி மற்றும் முயலை கடித்த நாயை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இந்த நூதன வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டியை அடுத்த கோனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சி.எம்.பீட்டர். இவர் தனது வீட்டில் முயல் மற்றும் கோழியை செல்லமாக வளர்த்து வரு கிறார்.
இவற்றை `ஜெர்மன் ஷெப்பர்டு' என்ற உயர்ந்த ரக நாய் ஒன்று கடித்து குதறியது. இதனால் முயலும், கோழியும் வேதனையால் துடித்தது.
இதைப்பார்த்த பீட்டரின் மனம் கனத்தது. எனவே வருத்தம் அடைந்த அவர் உடனடியாக கொரட்டி போலீஸ் நிலையம் சென்று இதுகுறித்து புகார் செய்தார்.
உடனே விரைந்து வந்த போலீசார் அங்கு சுற்றித்திரிந்த ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாயை லாவகமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு சங்கிலியால் கட்டிப்போட்டனர்.
கைது செய்யப்பட்ட நாய் யாருக்கு சொந்தமானது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Thanks:malaimalar.......

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............