12-08-2005, 07:00 AM
Quote:இது டி என் கோபாலனின் தனிப்பட்ட நடவடிக்கைதான், ஆயினும் இது நடந்து முடிந்திருந்தால், இப்படி நடந்து இருக்கிறது என பிபிசிக்கு செய்தி கொடுத்திருப்பார், அப்படி நடக்காததால் அது செய்தியாகவில்லை, தடுக்கப்பட்டதால் உண்மை வெளிவந்திருக்கிறது, அதைத்தான் நான் கூறுகிறேன் செய்தியாளர்கள், தமது பக்கச்சார்பை தினிக்க முயற்ச்சிக்கிறார்கள். ஒரு செய்தியாளரே இப்படி முறைகேடாக நடக்கிறார் என்றால், தமிழ் சேவையை நடாத்துபவர்கள் எப்படி நடப்பார்கள்? இன்னமும் விளக்கம் தேவை என்றாள் திருமகள் எழுதிய பிபிசி பற்றிய நடுநிலைமை பற்றிய கட்டுரையை படித்துப்பாருங்கள்.
<span style='color:red'><b>இங்கு விவாதிக்கப்படும் விடயத்திற்கும் எனது 'தடுமாறும் தமிழோசை' என்ற கட்டுரைக்கும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை.</b>
ஏனெனில் இங்கு குறிப்பிடப்படும் ஊடகவியலாளர் -இந்தக் கூட்டம் நடந்திருந்தபோதிலும் - அது குறித்து எதுவும் தெரிவிக்காது விட்டமை தற்போது எமக்குத் தெரியவந்திருப்பதை வைத்து, அவர் முன்னுதாரணமாகச் செயற்பட்டுள்ளார் என்றே கருதுகிறேன்.
காரணம் அவர் தாமே முன்னின்று ஒழுங்கமைத்த ஒரு நிகழ்வு குறித்து -தமக்குள்ள வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்திக் -கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தாது தவிர்த்திருக்கும் செயலானது பாராட்டப்படவேண்டியது என்பது எனது தனிப்பட்ட கருத்து
எனது கருத்தை அன்பிற்குரிய நண்பர் பிருந்தன் அவர்களும் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.
அது அவ்வாறிருக்க, தமிழோசை நிருவாகம் தற்போது தமது செவ்விகளில் பக்கம்சாராது எல்லாத்தரப்பினது கருத்துகளும் உள்ளவாறே வெளிப்படுமாறு தமது வினாக்களை அமைத்துள்ளமை பாராட்டத்தக்கது. </span>
<b>அன்புடன் திரு</b>

