12-07-2003, 06:10 PM
எரிக் சொல்கைம் பரதநாட்டியம் பாக்க வந்தவர் சனம் சும்மாவிட்டுதோ அவரைப்பாத்த சனம்தான் அதிகம். பரதநாட்டியம் பாக்கவந்த சனம் எல்லாம் போட்டிபோட்டது என்னத்திற்கு தெரியுமோ? எரிக்சொல்கைமுடன் போட்டோ எடுக்கத்தான். அட நம்மசனம் திருந்தினபாடு இல்லை அந்த சீமான் போஸ் கொடுத்து களைச்சுப்போனாராம். சுமார் 300 போட்டோ இன்று எடுபட்டிருக்கும் இவற்றைப்பாத்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார் பரதநாட்டிய அரங்கேற்றமோ அல்லது இது எரிக் சொல்கைமுக்கு போஸ் கொடுக்கிற நிகழ்வோ என்டு அப்படி இருந்தது இன்றய நிலமை. சொல்கைமுக்கு ஒரு பரிசும் கொடுக்கப்பட்டதாம் பெரிய பாசல் ஆவலாக து}க்கிக்கொண்டுபோறார் என்னவோ தெரியாது பாவம் றயிஸ்குக்கரை குடுத்தினமோ தெரியாது.

