12-07-2005, 10:12 PM
நன்றி திரு
மீண்டும் உங்கள் விளக்கத்திற்கு. இங்கு நீங்கள் குறிப்பிட்ட 3 இணையத்தளங்களிலும் ஒரு இணையத்தளம் மாத்திரமே வெளிப்படையாக ரி.என் கோபாலனை அவர் ஊடகவியலாளராக செயற்பட்டும் வேண்டுமென்றே பி.பி.சி செய்தியாளர் என குறிப்பிட்டது. அந்தச் செய்தியை இங்கு இணைத்தவர் இன்னும் திரிபுபடுத்தி பி.பி.சி என்றே தலையங்கமும் இட்டிருக்கின்றார்.
ஒரு ஊடகத்தின் பகுதி நேரச் செய்தியாளரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் அந்த ஊடகத்தைச் சார்ந்ததா என்பதற்கு நீங்கள் ஏன் பாலஸ்தீனம் வரை செல்கின்றீர்கள். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோமே. சில வாரங்களுக்கு முன் ஒரு செய்தி சம்பந்தமாக தவறான தகவல் தந்ததற்காக மன்னிப்பு கோரினீர்கள். அதை இன்னொரு ஊடகம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லி அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டது என்று போடமுடியுமா?? அல்லது நீங்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தருகின்றீர்கள் என்பதற்காக நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் போராட்டத்திற்கு உதவுகின்றது என்று செய்தி போட முடியுமா?? ஒரு முறை இப்பக்கத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள். பின் விரும்பினால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.