12-07-2005, 09:24 PM
shanmuhi Wrote:படம் :வாழ்வே மாயம்
இசை :கங்கை அமரன்
பாடல்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
நல்ல ஒரு அழகான அழுகைப்பாட்டு எண்டுதான் சொல்லவேண்டும், ஆனாலும் சொல்லப்பட்ட விடயங்கள் யாவும் அள்ள வேண்டிய முத்துக்கள்.
<b>ஆடும் வரை கூட்டம் வரும் ஆட்டம் நிண்றால் ஓட்டமிடும்</b>. எவ்வளவு இலகுவாக இரண்டு வரியில் உலக வாழ்வியலை சொல்லியிருக்கிறார் மனிசன். உண்மையிலேயே இதுதான் தத்துவப் பாடல்.
எனக்கும் பிடித்த பாட்டு. நினைவு படுத்திய சண்முகி அக்காவுக்கு நன்றிகள்.

