12-07-2005, 09:13 PM
எனக்குப் பிடித்தமான திருக்குறள் வரிகளுள் ஒன்று
<b>'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"</b>
எந்த ஒரு ஊடகம் சொல்வதையும் அல்லது எவர் கூறும் செய்தியையும் முழுமையாக நம்புவது எனது வழக்கமல்ல. காரணம் இந்தக் கணனி யுகத்திலே நாமே தேடி ஆராய்ந்து ஓரளவுக்கு உண்மையைக் கண்டறியமுடியும் என நான் உறுதியாக நம்புவதுதான்.
அதனால் இந்தக் கருத்தரங்கு தொடர்பில் வெளிவந்த மூன்று வெவ்வேறு செய்திகளை இங்கு ஒப்பிட்டுப்பார்த்த எனக்கு சில விடயங்கள்- மூன்று செய்திகளிலும் -பொதுவாக இருப்பது தெரிந்தது.
மூன்று விதமான செய்தி ஊடகங்கள் -மூன்று வெவ்வேறு தளங்களிலிருந்து இயங்குபவை- பொதுவான சில கருத்துகளைத் தெரிவித்தால் அந்தக் குறிப்பிட்ட விடயங்கள் அனேகமாக நடந்திருக்கக்கூடும் என நாம் நம்பலாம்.அதனால்தான் அவற்றை மட்டும் குறிப்பிடவிளைந்தேன்.
மேலுள்ள மூன்று ஊடகங்களில் எது செய்திகளைத் திரித்தது என்ற முடிவுக்கு வருவது எனக்குச் சிரமமான பணி. ஏனெனில் உண்மையாக நடந்தது என்ன என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் இந்த மூன்றில் செய்திகளைத் திரித்தது எந்த ஊடகம் அல்லது எந்த ஊடகங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுவேன்.
<b>அன்புடன் திரு</b>