Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்...
#1
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால், ஆக்கிரமிப்புப் படை, ஒட்டுப்படையில் பலர் கொல்லப்படுவர் - யாழில் எச்சரிக்கை
Written by Paandiyan Thursday, 08 December 2005

தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு படையிலும், துணைபுரியும் ஒடடுப்படையிலும் பலர் கொல்லப்படுவர் என பொங்கி எழும் தமிழீழ மக்கள் படை என்ற பெயரில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பப்பகுதிகளில், தொடர்நது இடம்பெற்றுவரும் இராணுவ வன்முறைகள், படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள், அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டு செல்வதினால் மக்களின் இயல்புவாழ்வு சீர்குலைக்கப்பட்டு நெருக்கடியான ஒரு நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வுகளுக்கு சிறீ லங்கா படையினரும். சிறீலங்கா புலனாய்வுப்பிரிவும், ஒட்டுக்குழுக்களுமே காரணமாக இருநது வருகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், அறிஞர்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியள்ளன. இந்த வகையில் கடந்த மாதம் 20ம் நாள், நெடுந்தீவிலும், 24ம் நாள் நீர்வேலியிலும், 26ம் நாள் ஊர்காவற்துறையிலும் படுகொலை முதயற்சிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தொடர்ந்தும் கொலை செய்வதற்கு நாம் இனி அனுமதிக்க மாட்டோம். இனிமேலும் தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமான ஆக்கிரமிப்புப்படையிலும், ஒடடுக்குழுக்களிலும் பலர் மோசமாகக்கொல்லப்படுவர்.

இனி பதிலுக்குப்பதில் நடவடிக்கைகள் பொங்கி எழும் தமிழீழ மக்கள் படையாகிய நாங்கள் மேற்கொண்டே தீருவோம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால்... - by Sriramanan - 12-07-2005, 08:53 PM
[No subject] - by sri - 12-15-2005, 11:31 AM
[No subject] - by sri - 12-15-2005, 11:36 AM
[No subject] - by sri - 12-20-2005, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)