Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சுகாசினியை ஆதரிக்க முறைகேடான முயற்சி: பி.பி.சி., 'இநது
#26
செய்திகளைத் திரித்து எழுதுவதில் எனக்கு என்றும் உடன்பாடில்லை. அதனை நான் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் விடயத்தில் மிக அவதானமாகக் கையாண்டுவருகிறேன்.

இங்கு மேலே தரப்பட்ட புதினம் செய்தியிலும் பின்னர் நான் இணைத்துள்ள இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளிலும் சில விடயங்கள் மட்டும் ஒத்திருக்கின்றன. அவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்துவில் அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்துவதைத் தடுத்தமை குறித்த செய்தி வந்துள்ள அதேவேளை சென்னை ஒன்லைனில் அதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லை. என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருக்கும் எவராவது தான் அறியத்தரவேண்டும்.


அதேவேளை இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளின் பிரகாரம் மேலே குறிப்பிட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளர் நடந்துகொண்ட முறை குறித்து எனக்கு எந்தவிதமான ஆட்சேபங்களும் கிடையாது. அச் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பதன்படி அவர் தன்னை ஒரு ஊடகவியலாளராகவே அடையாளப்படுத்திக்கொண்டாரே தவிர, எந்த ஒரு செய்திநிறுவனம் சார்பாகவும் தம்மை அவர் வெளிக்காட்டி இந்தக் கூட்டத்தினை ஒழுங்கமைக்கவில்லை.

எவரையும் ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ ஊடகவியலாளருக்கு உரிமை உண்டு. இது அவரது தனிமனித சுதந்திரம் என்பது எனது நிலைப்பாடு. ஆனால் அவரது இந்தத் தனிப்பட்ட நிலைப்பாடு செய்திகளை அவர் தயாரிக்கும்போது அதிலே-செய்திகளிலே- வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இச்சம்பவத்தின் பின் இதுநாள்வரை தமிழோசையில் இந்தக் கருத்தரங்கு குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளின் பிரகாரம் மேற்குறித்த கருத்தரங்கு அதேநாள் அருகிலுள்ள பிறிதொரு இடத்தில் நடந்துள்ளது. எனவே மேலே குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர் இதனை ஒரு செய்தியாகத் தமிழோசையில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் இன்றைய தினம் வரை அதனைச் செய்யவில்லை.

இந்த ஒரே ஒரு காரணம்பற்றியே நான் இந்த ஊடகவியலாளர் குறித்த விமர்சனத்தில் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க விரும்பினேன்.

அவர் இதனை தனது தனிப்பட்ட ஒரு விடயமாகக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எனவே அதுபற்றி இங்கு நான் கருத்துச் சொல்வதே தவறு என்பது எனது மனஓட்டமாக இருந்தது.

எனினும் நண்பர் வசம்பு அவர்கள் கேட்டதன் பிற்பாடு இதே சந்தேகம் வேறு நண்பர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளதால் இங்கு பகிரங்கமாக எனது கருத்தினைக் கூறநேரிட்டது.

இதற்காக அந்தக் குறிப்பிட்ட ஊடகவியலாளர் என்னைப் பொறுத்தருளவேண்டும் என மானசீகமாக வேண்டிக்கொள்கிறேன்.

<b>அன்புடன் திரு</b>

<b>குறிப்பு:</b> மேலுள்ள பதிவுகளில் தர்க்கிக்கப்பட்ட இன்னொரு விடயம் பி.பி.சி செய்தியாளராக இருக்கும் ஒருவர் இவ்வாறு தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாமா -ஒழுங்கமைக்கலாமா -என்பதுவாகும். இதுகுறித்து பி.பி.சி நிறுவனத்தின் செய்தியாளர்களுடனான ஒப்பந்தம் என்ன சொல்கிறது, பலஸ்தீனத்திலிருந்து செய்தி வழங்கிய பெண் நிருபர் ஒருவர் யசீர் அரபாத்; சிகிச்சைக்காகச் சென்றபோது தனது உணர்ச்சிகளை பி.பி.சியில் வெளிப்படுத்தியது குறித்த சர்ச்சையில் பி.பி.சி எடுத்த முடிவு ஆகியன பற்றிய விபரங்களை இப்போது சேகரிக்க முயன்றுவருவதால் அதுகுறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 05:58 AM
[No subject] - by Birundan - 11-24-2005, 12:38 PM
[No subject] - by Vasampu - 11-24-2005, 01:28 PM
[No subject] - by Birundan - 11-24-2005, 02:30 PM
[No subject] - by தூயவன் - 11-24-2005, 02:35 PM
[No subject] - by Vasampu - 11-24-2005, 02:58 PM
[No subject] - by Birundan - 11-24-2005, 03:14 PM
[No subject] - by தூயவன் - 11-24-2005, 03:48 PM
[No subject] - by adithadi - 11-24-2005, 05:18 PM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 09:03 PM
[No subject] - by Vasampu - 11-25-2005, 01:59 PM
[No subject] - by Thala - 11-26-2005, 12:16 AM
[No subject] - by Mathuran - 11-26-2005, 12:32 AM
[No subject] - by Vasampu - 11-26-2005, 02:47 AM
[No subject] - by Birundan - 11-26-2005, 03:11 AM
[No subject] - by Vasampu - 11-26-2005, 04:14 AM
[No subject] - by Thala - 11-26-2005, 10:32 AM
[No subject] - by Birundan - 11-26-2005, 11:24 AM
[No subject] - by Vasampu - 11-26-2005, 03:00 PM
[No subject] - by Thala - 11-26-2005, 08:07 PM
[No subject] - by vasanthan - 12-02-2005, 04:34 PM
[No subject] - by Vasampu - 12-02-2005, 05:34 PM
[No subject] - by thiru - 12-07-2005, 06:33 PM
[No subject] - by Vasampu - 12-07-2005, 07:19 PM
[No subject] - by thiru - 12-07-2005, 08:19 PM
[No subject] - by thiru - 12-07-2005, 09:13 PM
[No subject] - by Vasampu - 12-07-2005, 10:12 PM
[No subject] - by Birundan - 12-08-2005, 02:43 AM
[No subject] - by thiru - 12-08-2005, 02:49 AM
[No subject] - by thiru - 12-08-2005, 07:00 AM
[No subject] - by Thala - 12-10-2005, 08:06 AM
[No subject] - by Mathuran - 12-10-2005, 01:09 PM
[No subject] - by தூயவன் - 12-21-2005, 05:14 AM
[No subject] - by kuruvikal - 12-21-2005, 09:43 AM
[No subject] - by Vasampu - 12-21-2005, 01:53 PM
[No subject] - by தூயவன் - 12-21-2005, 02:15 PM
[No subject] - by Vasampu - 12-21-2005, 02:32 PM
[No subject] - by Luckylook - 12-21-2005, 02:39 PM
[No subject] - by தூயவன் - 12-21-2005, 02:40 PM
[No subject] - by Luckylook - 12-21-2005, 02:43 PM
[No subject] - by Vasampu - 12-21-2005, 02:46 PM
[No subject] - by Luckylook - 12-21-2005, 02:52 PM
[No subject] - by தூயவன் - 12-21-2005, 02:58 PM
[No subject] - by தீபா - 12-21-2005, 03:39 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)