12-07-2005, 07:29 PM
அடுத்த நாள் காலையிலேயே அன்னம்மாக்கா வந்து விட்டா விடுப்பு கேட்க. வேணியின் அம்மாவிடம் "என்ன அக்கா என்ரை மனிசன் நேற்று வேணியைய்யும் அந்த கொழும்புத்தம்பியையும் ஒண்டா பார்த்தவராம்.ஏன் நீங்கள் போகேல்லை" என்று சொல்ல அம்மா சொன்னா "நான் தான் அனுப்பினான் கூட்டி கொண்டு போக ஆரும் இல்லை என்ன செய்ய உதவிக்கு அந்த தம்பியுடன் போனா" என்று அவ வாயை அடைத்தா அம்மா.
ஆனால் நேற்று சண் சொன்னது அவளால் நம்ப முடியவில்லை அவனிடம் திரும்பவும் அந்த வார்த்தைகளை கேட்க ஆசையா இருந்தது ஆனால் எப்போ திருப்பி சண்ணை பார்ப்பது அவர்கள் வீட்டுக்கும் போக வெட்கமாக இருந்தது. ஆசை வெட்கமறியாது அம்மாவிடம் சொல்லி விட்டு நோட்ஸ் புத்தகம் வாங்க போவதாக சொல்லி விட்டு போனாள்.
அவர்கள் வீட்டுக்கு கிட்ட போகும் போது கால்கள் பின்னியது மெதுவாக அன்னம் போல் நடந்து போனாள். அங்கே வாசலில் நின்றான் சண் வேணியை பார்த்ததும் அவன் ஒரு கனிவுடன் "வாங்கோ வேணி அம்மா வீட்டை இல்லை ஏதும் வேணுமா? ஓம் உங்களிட்டை கலாநிதி சித்திர வடிவேல் எழுதிய விலங்கியல் புத்தகம் இருக்கா? இருந்தால் தாங்கோ" என்று உளறினாள் "ம்ம் அது உங்களிடம் தானே தந்து விட்டேன் என்ன இது குழப்பமா நான் நேற்று சொன்னது உண்மை தான் யோசிக்காமல் இருங்கோ அம்மா வந்தால் பிறகு வாங்கோ "என்று அவளை அனுப்பினான்.
-தொடரும்-

inthirajith