12-07-2005, 07:08 PM
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 11</b>
கண்ணடித்த நண்பி அருகே வந்து அவளிடம் மெல்ல "நல்ல காதலனடி, காதலி குடும்பத்துக்கும் பார்த்து கடவுளை கும்பிடும் நல்ல ஆளு தான்" என்று சொல்ல வேணியோ என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.
ஆறுதலாக கும்பிட்டு விட்டு வெளியே வந்த சண் வேணியிடம் "வேணி எனக்கு ஒரு ஆசை என்றான்" "என்ன ஆசை சொல்லுங்கோ" என்று ஆவலுடனும் ஆசையுடனும் கேட்டாள் வேணி "ம்ம் எனக்கு கோவில் மடத்தில் சாப்பிட ஆசையா இருக்கு வாறிங்களா சாப்பிடுவோம்" என்று கேட்ட போது அம்மா சமைத்து வைத்திருக்கும் சமையல் நினைப்ப்பு வந்தது ஆனாலும் சண்ணுடன் சேர்ந்து சாப்பிடுவது சந்தோசமாக இருந்தது "சரி வாங்கோ சாப்பிடுவோம் என்று அவனையும் அழைத்துக் கொண்டு போனாள். அங்கேயும் அவளுக்கு விதி விளையாடியது. பக்கத்து வீட்டு அங்கிளும் வாசலில் நின்றார் அவளை பார்த்து விட்டு தடை இல்லாமல் உள்ளே சாப்பிட விட்டார். சண்னையும் சேர்ந்து பார்த்தவர் நமுட்டு சிரிப்புடன் வழி விட்டார். நாளைக்கு அவரின் மனைவி அன்னம்மாக்கா ஊர் முழுக்க பறை தட்டப்போறா என்ற யோசனையுடன் பந்தியில் சண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். அங்கேயும் அப்பாவின் சினேகிதர் தான் சாப்பாடு போட்டார் "ஓ பிள்ளை எப்படி சுகம் இதுயாரு? என்று கேட்ட போது" எனக்குத் துணையா கோவிலுக்கு வந்தவர் என்று மட்டும் சொன்னாள் வேணி. அவர் சந்தேகத்துடன் திரும்பி திரும்பி பார்த்தபடியே போனார்.
சாப்பிட்ட சண் க்கு இவர்களின் பொடிவைத்த பேச்சு புரியவில்லை ஆனால் வேணி மட்டும் ஏதோ அவஸ்தை படுவது புரிந்தது. "என்ன வேணி மூட் குழம்பி இருக்கிறீங்க சொல்லுங்கோ?" என்று கேட்டவனிடம் வெளியே போனதும் சொல்கிறேன் என்று சொன்னாள்.சாப்பிட்டுமுடிந்ததும் சண் சொன்னான் "நல்லா இருக்கு வேணி இன்றுதான் முதல் முறை சாப்பிட்டேன் நல்லா இருக்கு" என்று சொல்லி கொண்டே வெளியே வந்த சண் "வாங்கோ லிங்கம் கூல்பாருக்கு போவோம் ஜஸ்கிறீம் குடிக்க" என்று அழைத்து கொண்டு போனான் அங்கே அவள் நெளிந்து கொண்டே இருந்தாள் "என்ன சொல்லுங்கோ பிரச்சனையா இருக்கிறீங்க ?" என்று கேட்ட போது "இல்லை உங்களுடன் கோயிலுக்கு வந்தது எல்லோரும் ஏதோ சந்தேகமாக பார்க்கினம் கூடபடிக்கும் பிள்ளைகளும் தப்பா நினைக்கினம் என்ன சொல்வது என்று தெரிய வில்லை" என்று சொன்னாள்
அப்போ தான் சண் ஒரு வார்த்தை சொன்னான் "கோவிலுக்கு முன்னால் வைத்து யார் என்ன சொன்னலும் நீங்கள் மறுக்க வேண்டாம் வேணி. அப்பா சொன்னது போல் காலம் கனிந்து வரும்" என்று காதலுடன் பார்த்தான் சண்.

inthirajith