12-07-2005, 03:06 PM
ஒரு நாள் துர்க்கையம்மன் கோவிலுக்குப் போக ஆயத்தபடுத்தும் போது, அம்மாவுக்கு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை துர்க்கையம்மன் தேருக்காக விரதம் இருந்த வேணிக்கும் கோவிலுக்கு போக துணையாக யாரும் இல்லை.
அப்போ தான் சைக்கிளில் சிவப்பழமாக வேட்டியுடன் வந்தான் சண். அவனைப் பார்த்த வேணியின் அம்மா "தம்பி தயவுசெய்து வேணியையும் கூட்டி கொண்டு போறீங்களா?" என்று கேட்டா. !சரியம்மா வேணியை அவவின் சைக்கிளில் வர சொல்லுங்கோ" என்று சொல்லி விட்டு இருவருமாக துர்க்கையம்மன் கோவிலுக்கு போகும் போதுஇ அத்தனை சந்தோசம் வேணிக்கு. இன்று 7வது செவ்வாய் கிழமை தான் நேர்ந்தது போல் இந்த முறை சண் கூட வருவது மகிழ்ச்சிய்யாகவும் இருந்தது வேணிக்கு.
அவ்வழியாக வந்த அவள் நண்பிகள் சந்தோசமாக அவளை பார்த்து சிரித்தார்கள் கடவுளே நாளைக்கு சரி பள்ளிக்கூடத்தில் என்னை நக்கலடித்தே ஒரு வழி பண்ணப்போகினம் என்று நினைக்கவே ஏதோ வெட்கம் அவளை பிடுங்கித் தின்றது.
ஒருவாறு சண் உடன் கதைத்தபடியே கோவிலில் அவனுடன் வீதியை சுற்றும் போது, அவள் மனதார அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவளைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவளை பொறாமையுடன் பார்த்தார்கள். கூட படிக்கும் தோழிகள் மெல்ல வந்து காதில் "ம்ம் நல்ல இருக்கிறார் புளியங்கொம்புதான்டி வேணி" என்று கிசுகிசுத்து விட்டு போனார்கள் 8 முழவேட்டியுடன் மார்பு முழுவதும் சால்வையால் மறைத்து இருந்தாலும் அவன் ரோமமும் அகன்ற நெஞ்சும் ம்ம் அழகான ஆம்பிளை தான் என்று தன் கண்களாலே விழுங்கினாள் வேணி. தேர் முட்டியில் அர்ச்சனை பண்ண நின்றபோது சண் இடிபாட்டுக்குள் அவனுடன் நெருங்கியே நிற்க வேண்டி வந்தது. கோழிகுஞ்சை அடைகாக்கும் கோழி போல அவளில் யாரும் இடிக்கமால் கவனமாக பாதுகாத்துஇ அவள் பேருக்கும் அவனே டிக்கெட் எடுத்து தன் குடும்பம் அவள் குடும்பம் என்று சேர்த்து அர்ச்சனை செய்யும் போது கூட படிக்கும் தோழியும் அப்போதுதானா அருகில் வர வேண்டும் ஜயர் சொன்ன பேர்கள் எல்லாமே அவள் காதிலும் விழுந்துவிட்டது அவள் இவளைப் பார்த்து கண்ணடித்தாள்.
-தொடரும்-

inthirajith