12-07-2005, 02:44 PM
சண் அப்பாவுக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் போய்விட்டது வேணியின் மனம் அவருக்கு தெரிந்துவிட்டது அவர் சண்ணிடம் சொன்னார்.
"தம்பி யாரிடமும் எப்போதும் மனகஸ்ரம் கொடுக்காமல் பழகவேணும். நான் சொன்னது புரிந்து இருக்கும் தானே அந்தபிள்ளைக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை போல் இருக்கு. அப்போ சண் அம்மா சொன்னா "ஏனப்பா சண் இஞ்ச படிச்சு இங்கேயே டொக்ரரா இருந்தால் நல்லம் தானே ஏன் வேறை நாட்டுக்கு அலைவான் எங்களுக்கும் மகள் கலியாணம் கட்டி போனால் யாரப்பாபா இருக்கினம் தம்பி இல்லாமல் விசர் எல்லே பிடிக்கும் நீங்களும் வேறை ஊரிலை ஏன் இந்த வீட்டை கட்டினீங்கள் பிள்ளைகளுக்கு தானே பிறகு யூகே எண்டு சொன்னால் என்ன கதை" என்று அம்மா கோபமாக அப்பாவுடன் கதைத்தா
அவர்களுக்கு இடையில் கதைத்த சண் "எனக்கு வேறை நாடு போக விருப்பமில்லை.இங்கேயே வேலை செய்யப்போறன் இன்னும் 5 வருடங்கள் இருக்குத்தானே அப்போ யோசிப்போம் சும்மா ஏன் சண்டை பிடிப்பான்" என்று சண் அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சண்.
அப்பா இருக்கும்வரை வேணிக்கு சண் வீட்டுபக்கமே போகபö பிடிக்கவில்லை ஆனால், சண் அப்பாவே அவளை தேடி வீட்டுக்கு வந்தபோது, அவளால் மறுக்கமுடியவில்லை. சண் அப்பாவும் வேணி அப்பாவும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள் அவர் திரும்பி கொழும்புக்கு போக முதல் வேணியின் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து இருந்தார்கள்.
அந்த இரவு உணவின் போது போது சண்ணும் வந்து இருந்தான். சாப்பிடும் போது "சாப்பாடு நல்ல இருக்கு" என்று பாராட்டிய போது வேணி அம்மா சொன்னா "இன்டைக்கு நான் சமைக்கவே இல்லை எல்ணாம் வேணிதான் என்னை சமையலறைகுள் போகவே விடவில்லை. தம்பி உப்பு உறைப்பு எல்லாம் சரியா இருக்கோ என்று வேணி அம்மா கேட்டபோது சண் அப்பா கேட்டார் "வீடு எல்லாம் பூக்கன்று வைத்தது யார்.." என்று வேணி அப்பா சொன்னார் பிள்ளை தான் எங்களுக்கு கைவைக்க முடியாது அவவின் அரசு தான் இங்கே என்று சிரிக்க சண் அம்மாவும் "எங்கட பூந்தோட்டமும் வேணி உதவி தான்" என்று சொல்ல சண் சொன்னான் "ஓம் வேணியில்லாமல் எனக்கு இத்தனை அறிவு வராது அவவுக்கு நல்ல கைராசி" என்று சிலாகித்து பேசினான்.
நன்றி சொல்லிவிட்டு வேணியின் அப்பா போகும் போது வேணியிடம் "பிள்ளை எனக்கும் கொஞ்சம் புரியும் யோசிக்கவேண்டாம் கடவுள் எழுதினதுபடி நடக்கும் என்று கண்ணை சிமிட்டிய படியே சொன்ன போது, தன் மனம் அவருக்கு புரிந்து விட்டது என்று வெட்கமாகி விட்டது வேணிக்கு.

inthirajith