12-07-2005, 02:15 PM
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 10</b>
சமையலறைக்குள் சென்ற வேணி சண் அம்மாவுக்கு உதவிகள் செய்துகொடுத்தா அப்போது அங்கே வந்த சண் அப்பா "ஓ நல்ல கை உதவியா தான் இந்த பிள்ளை இருக்கிறா" என்று சொல்லிச் சிரித்தபோது சண் அம்மா சொன்னா "ஓமப்பா கோவிலுக்கு கடைக்கு எல்லாம் இவ இல்லா விட்டால் சரியான கஸ்ரம். வேணியின் அப்பா தான் சந்தைக்கும் எல்லா இடத்துக்கும் போகும் போது எங்கள் எல்லாரையும் நினைத்து வாங்கி கொண்டு வருவார்" என்று சொல்லிகொண்டே போனா.
ம்ம்... என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அங்கே வந்த சண் "அப்பா அம்மாவை பார்த்திங்களே சம்பளமில்லாமல் ஒரு ஆள் இருக்கு" என்று சொல்லி விகல்பம் இல்லாமல் சிரித்தான் அப்போ சண் அப்பா கேட்டார்.
"சண் உங்கள் மாமியும் மகளும் யூ.கே இல் இருந்து அடுத்த மாதம் வருகினமாம் நீ யூனிவசிற்றிக்கு மெடிசின் கிடைத்து போகிறாய் என்று சொன்னான் அவைக்கும் நல்ல சந்தோசமா இருக்கினம் யூனிவசிற்றி படிப்பு முடிய உன்னை யூகே வரட்டம் மேற்கொண்டு அங்கே படிக்கலாம் என்று மாமியும் சொன்னா உன் யோசனை என்ன?" என்று அப்பா கேட்டார்.
சண் அம்மா சிரித்து கொண்டே கேட்டா "என்னப்பா ஆச்சரியமா கிடக்கு உங்கட தங்கச்சி எங்களிலை பாசமாகிவிட்டா என்னவாம் சொன்னா என்று கேட்டா இல்லையப்ப சண் இல் மேகலாவுக்கு விருப்பமாம் என்று தான் தங்கச்சி சொன்னவா அது தான் சண்ணை பார்க்கவருகினம்" என்று சொல்லிவிட்டு கூர்மையாக வேணியை பார்த்தபடி இருந்தார் சண் அப்பா.
திடுமென்று எழும்பிய வேணி " நான் வீட்டை போறேன்" என்று சொல்லி விட்டு கண்கள் குளமாக கண்னை துடைக்க கூட தோன்றாமல் வெளிக்கிட்டாள் "ஏன் வேணி போறீங்கள்" என்று கேட்ட சண் இடம் பதில் சொல்லhமல் போனாள் அந்த மனமுடைந்த பேதை.

inthirajith