12-07-2005, 12:55 PM
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டுள்ளார். ஒரு சிப்பாய் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைத் தெருப்பக்கமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர் மாங்குளம் ஓமடுவைச் சேர்ந்த சுப்ரமணியம் யோகபுத்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களான பாஸ்கரன் கமலேஸ்வரி (வயது 36), மகேஸ்வரன் கமலரூபன் (வயது 21), தம்பிராஜா சந்திரபோஸ் (வயது 30), ஜெரால்ட் நீலமேகம் (வயது 25), இராணுவ வீரரான பிரசன்னா ஜயதிலக்க (வயது 22) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதினம்

" "