Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோ, நெடுமாறன் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில்
#1
<b>வைகோ, நெடுமாறன் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் கொண்டு விழிப்புடன் செயற்படுவோம்</b>

கூட்டமைப்பு எம்.ப.ஈழவேந்தன்

"கொழும்பின் பொறிக்குள் மீண்டும் இந்திய அரசு வீழ்ந்துவிடக்கூடாது" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்ச்சியாக விடுத்துவரும் எச்சரிக்கையை நாம் எளிதில் புறக்கணிக்க முடியாது. 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம். இது காலப்போக்கில் தீப்பந்தமாகப் பற்றி எரியும் என்று நாம் எச்சரித்தோம். நாம் எச்சரித்ததற்கு அமைய இவ்ஒப்பந்தம் தீப்பந்தமாகப் பற்றி எரிந்தது மட்டுமல்ல நாம் மிகமிக வருந்தத்தக்க முறையில் இந்தியத் துணைக்கண்டத்தின் தலைமை அமைச்சராக விளங்கிய ராஜீவ்காந்தியையும் சேர்த்து எரித்ததை நாம் இங்கு நினைவு கொள்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பனர் ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அவசரத்தில் தெளிக்கப்பட்ட அலங்கோலம் என எச்சரித்தார்.

தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற முறையில் இந்த ஒப்பந்தம் அமைந்ததனால் உயிர்களை ஆயிரக்கணக்கில் நாம் இழந்தோம். இந்திய இராணுவத்திற்கும் தேவையற்ற இழப்பு ஆயிரக்கணக்கில் ஏற்பட்டது. ஈழத்தமிழ் மக்களும் இந்திய மக்களும் தொடர்ந்து இணைந்து வாழவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனைக் கெடுக்கின்ற - சின்னாபன்னம் ஆக்குகின்ற முறையில்தான் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியா தலையிட்டுத்தான் ஈழத் தமிழ் மக்களுடைய இனச்சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றார்.

மகிந்த ராஜபக்‌ஷ இந்தியத் தலைவர்களை சந்திக்க இருப்பதாக வெளிவரும் செய்திகள், உறுதியாக ஈழத்தமிழ் மக்களுக்கு இடையூறினையும், இன்னலையும் தரும் முயற்சியாக இருக்கப்போவது உறுதி.

தமிழீழத்தேசியதலைவர் மாவீரர் நாளில் விடுத்துள்ள உரையை செவிமடுத்து ஆவன செய்யத்தவறின், நாட்டில் இரத்தக்களரி ஏற்படும், இதற்கு மகிந்த ராஜபக்‌ஷவும் சிங்களத்தலைமை பேரினவாதமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மிக அண்மையில் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையை நாம் மனதில் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும்.

தமிழீழம் எங்கும் போர் மோகம் சூழ்ந்துள்ளது. திருமலை மாவட்டத்தில் மூதூரை சூழ்ந்துள்ள பகுதிகளில் கொலைகள் நடைபெற்றுள்ளன. அத்தோடு பதற்றநிலை நிலவுகிறது.

யாழ். மாவட்டச் சூழல் பயங்கர வடிவத்தைப் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டு வீச்சுகளும் மாறிமாறி நடக்கின்றன. நாம் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைமைப்பீடத்துடன் நீண்ட நேரம் உரையாடியும் உரிய பயன் கிடைக்கவில்லை. யாழ். அரசியற்றுறைத் தலைவர் இளம்பரிதிக்கும் யாழ். படைத்தளபதி சுனில் தென்னக்கோனுக்கும் இடையில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் நாம் நினைவில்கொண்டு வைகோ வழங்கிய எச்சரிக்கையையும் நெடுமாறன் வழங்கிய எச்சரிக்கையும் நினைவிற்கொண்டு நாம் விழிப்போடு இருப்போம்.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வைகோ, நெடுமாறன் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் - by Vaanampaadi - 12-07-2005, 11:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)