Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#4
Quote:1)
மதம்
மனிதர்களின் கற்பனை ஓவியம்
மனிதனே தன்னைத்தான் அழிக்கும் ஆயுதம்
அணுகுண்டு தோற்றுவிடும்
மதம் போடும் சண்டையிலே
எத்தனை துளிகள் வீழ்ந்தபோதும்
எத்தனை நதிகள் பாய்ந்தபோதும்
எல்லாம் கலப்பது கடலிலே என
மானிடர் இங்கு புரியமறுப்பதுமேனோ

2)
பெயரிற்கு நீ இன்ன மதத்தவனாய் இரு
மதத்திற்காக உன்னை மாற்றாதே
மதத்திற்காக உன்னை அழிக்காதே
மதத்திற்காக உலகை சிதைக்காதே
மதத்திற்காக வானைக்கிழிக்காதே
நீயும் கிழிந்துபோவாய்

3)
புூக்கள் நிறப்பிரிகை
பார்த்து மகி;ழ்ந்திடும் மானிடர்கூட்டம்
கலப்பு புூக்களை
கைகளில் ஏந்திடும் கூட்டம்
மனிதக்கலப்பினை
கொன்றுபோடுவதுமேனோ
அவை புதிதாய் பிறப்பதை
புரியமறுப்பதுமேனோ
மதம்
மனிதனை ஏற்றி மிதிக்கும்
அடங்காத கற்பனை

4)
மதம் என்ற பெயரினால்
மனிதா நீ ஏன்
மதம்பிடித்து அலைகின்றாய்
அல்லர் என்பவனும்
இயேசவே என்பவனும்
சிவனே என்பவனும்
ஓன்றாய் மடிவது
ஒருங்கே அழிவது
எல்லாம் கண்முன்னே
காட்சிகளாய் கண்டபின்னும்
மதம் என்னும் அரக்கனை நீ
அணுகவே முயல்கி;ன்றாய்

5)
என்றுமே புரிய மறுப்பது
மனித மனம்
மாறிக்கொண்டேயிருப்பதும் அதுதூன்
மாற்றிக்கொண்டேயிருப்பதும் அதுதான்

6)
தென்றல் தொட்டுப்போனதாய்
திங்கள் சுட்டுச்சென்றதாய்
மகரந்த தீண்டல் மனதை வருடியதாய்
வீழ்ந்த துளி பாதம் குளிர்ந்ததாய்
சொல்லிக்கொள்கின்றாய்
என்காதல் என்ன செய்கின்றுதென
எப்போது சொல்லிக்கொள்வாய் ?

7)
அலட்டல் இல்லாத உன்
அமைதிப்பேச்சு
சிந்திவிடாத உன் புன்னகை
ஓளிர்ந்துகொண்டிருக்கும்
உன் விழிகள்
காற்றில் அசைந்து
கவிதைகள் பலசொல்லும் கருங்கூந்தல்
எல்லாவற்றையும் விட
அவசரமில்லாத உன் காதல்
எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு


அழுதுகொண்டுவரும் பிஞ்சிடம்
ஆறுதல் சொல்ல என்னிடம் தெம்பில்லை
முகவரி தொலைத்தவன் என அவனை ஏசியவர்
என்னையும் ஏசியுள்ளார்
தமிழனாய் பிறந்தமையால் முகவரிமட்டுமல்ல
முகமும் தொலைத்து நிற்கின்றோம்
ஈழத்தின் அவலத்திலே

9)
எனக்கான உன் பரிவுப்பார்வை
குரலோசை குயில்கீதம்
மௌனம் காத்து
சம்மதமாக்கும் அந்த நிமிடம்
எனக்கு உன்னை
ரொம்பவே பிடிச்சிருக்கு

10)
எழுதிக்கொண்டேயிருப்பேன்
வானமும் புூமியும்
முட்டி மோதினாலும்
புூக்கள் வண்டினை நிராகரித்தாலும்
சூரியன் நொருங்கி
தேசம் இருண்டாலும்
நீ என்னருகில் உள்ளவரை
என் கரங்கள் ஓயாது
நன்றி: கரவைபரணி
Reply


Messages In This Thread
அபாயம் - by sethu - 12-02-2003, 09:27 PM
[No subject] - by anpagam - 12-03-2003, 12:05 AM
[No subject] - by anpagam - 12-03-2003, 12:17 AM
[No subject] - by anpagam - 12-07-2003, 01:12 PM
[No subject] - by anpagam - 12-09-2003, 01:09 PM
[No subject] - by anpagam - 12-13-2003, 12:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)