Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக்காதல்
#1
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"

"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."

சில காலமாகவே இது எனக்கு வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,

"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.

சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் என்னிடம் வந்து காசு கேட்பதும்.

"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இப்பல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பிச்சிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் எதற்கெடுத்தாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.

"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவ பேரு சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள். ஆனாலும் நல்ல களையான முகம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.

அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் அதனால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவிவந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,

"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"

விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப சீரியஸாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் தான் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு சி, லாங்குவேஜையெல்லாம் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குதுன்னு சொன்னா அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.

சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். புஸ்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்ப்பட்டது.

படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"

"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இது ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,

"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."

என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறாய்இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள். அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.

அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை
http://imohandoss.blogspot.com/2005/12/blo...og-post_05.html
Reply


Messages In This Thread
தமிழீழக்காதல் - by spyder12uk - 12-07-2005, 11:09 AM
[No subject] - by RaMa - 12-07-2005, 07:30 PM
[No subject] - by tamilini - 12-07-2005, 08:48 PM
[No subject] - by sOliyAn - 12-09-2005, 02:07 AM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 05:13 AM
[No subject] - by கந்தப்பு - 12-09-2005, 05:42 AM
[No subject] - by அருவி - 12-09-2005, 06:45 AM
[No subject] - by அருவி - 12-09-2005, 06:49 AM
[No subject] - by தூயவன் - 12-09-2005, 08:01 AM
[No subject] - by poonai_kuddy - 12-09-2005, 11:08 PM
[No subject] - by tamilini - 12-09-2005, 11:24 PM
[No subject] - by narathar - 12-09-2005, 11:36 PM
[No subject] - by AJeevan - 12-09-2005, 11:51 PM
[No subject] - by Vasampu - 12-10-2005, 02:27 AM
[No subject] - by Saanakyan - 12-10-2005, 04:41 AM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 05:00 AM
[No subject] - by Saanakyan - 12-10-2005, 05:27 AM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 05:33 AM
[No subject] - by Saanakyan - 12-10-2005, 06:03 AM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 06:43 AM
[No subject] - by Saanakyan - 12-10-2005, 07:02 AM
[No subject] - by MUGATHTHAR - 12-10-2005, 07:42 AM
[No subject] - by Saanakyan - 12-10-2005, 08:12 AM
[No subject] - by அருவி - 12-10-2005, 10:01 AM
[No subject] - by Eelavan - 12-10-2005, 10:29 AM
[No subject] - by AJeevan - 12-10-2005, 11:05 AM
[No subject] - by sathiri - 12-10-2005, 11:15 AM
[No subject] - by sathiri - 12-10-2005, 11:18 AM
[No subject] - by AJeevan - 12-10-2005, 11:42 AM
[No subject] - by AJeevan - 12-10-2005, 11:44 AM
[No subject] - by Vasampu - 12-10-2005, 12:39 PM
[No subject] - by தூயவன் - 12-10-2005, 01:19 PM
[No subject] - by AJeevan - 12-10-2005, 02:21 PM
[No subject] - by Vasampu - 12-10-2005, 02:34 PM
[No subject] - by kuruvikal - 12-10-2005, 03:26 PM
[No subject] - by siluku - 12-10-2005, 03:45 PM
[No subject] - by kuruvikal - 12-10-2005, 03:56 PM
[No subject] - by siluku - 12-10-2005, 04:42 PM
[No subject] - by kuruvikal - 12-10-2005, 04:53 PM
[No subject] - by tamilini - 12-10-2005, 07:59 PM
[No subject] - by tamilini - 12-10-2005, 08:15 PM
[No subject] - by siluku - 12-10-2005, 08:23 PM
[No subject] - by tamilini - 12-10-2005, 08:48 PM
[No subject] - by AJeevan - 12-11-2005, 03:56 AM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 05:43 AM
[No subject] - by Saanakyan - 12-11-2005, 08:20 AM
[No subject] - by AJeevan - 12-11-2005, 11:27 AM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:46 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:50 PM
[No subject] - by Vasampu - 12-11-2005, 06:49 PM
[No subject] - by kuruvikal - 12-11-2005, 07:45 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 08:04 PM
[No subject] - by Vaanampaadi - 12-11-2005, 08:09 PM
[No subject] - by samsan - 12-11-2005, 08:31 PM
[No subject] - by KULAKADDAN - 12-11-2005, 08:54 PM
[No subject] - by kuruvikal - 12-11-2005, 09:22 PM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 03:16 AM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 03:29 AM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 03:42 AM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 03:59 AM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 04:26 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 04:38 AM
[No subject] - by vasisutha - 12-12-2005, 04:44 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 05:32 AM
[No subject] - by mohandoss - 12-12-2005, 06:29 AM
[No subject] - by mohandoss - 12-12-2005, 06:30 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 06:38 AM
[No subject] - by Saanakyan - 12-12-2005, 06:41 AM
[No subject] - by Vasampu - 12-12-2005, 08:04 AM
[No subject] - by narathar - 12-12-2005, 02:05 PM
[No subject] - by AJeevan - 12-12-2005, 03:35 PM
[No subject] - by matharasi - 12-12-2005, 03:55 PM
[No subject] - by Mathan - 12-12-2005, 04:50 PM
[No subject] - by tamilini - 12-12-2005, 04:54 PM
[No subject] - by tamilini - 12-12-2005, 04:59 PM
[No subject] - by AJeevan - 12-12-2005, 11:28 PM
[No subject] - by adsharan - 12-13-2005, 12:08 AM
[No subject] - by matharasi - 12-13-2005, 12:13 AM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 12:15 AM
[No subject] - by Vasampu - 12-13-2005, 12:41 AM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 12:58 AM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 01:07 AM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 01:19 AM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 01:28 AM
[No subject] - by தூயவன் - 12-13-2005, 04:17 AM
[No subject] - by Maruthankerny - 12-13-2005, 06:22 AM
[No subject] - by AJeevan - 12-13-2005, 04:40 PM
[No subject] - by Mathan - 12-13-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 12-13-2005, 07:20 PM
[No subject] - by kuruvikal - 12-13-2005, 07:26 PM
[No subject] - by kurukaalapoovan - 12-13-2005, 10:41 PM
[No subject] - by Vasampu - 12-13-2005, 11:14 PM
[No subject] - by Saanakyan - 12-13-2005, 11:32 PM
[No subject] - by AJeevan - 12-14-2005, 12:08 AM
[No subject] - by Saanakyan - 12-14-2005, 12:56 AM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 06:05 AM
[No subject] - by sathiri - 12-14-2005, 08:33 AM
[No subject] - by sathiri - 12-14-2005, 08:36 AM
[No subject] - by mohandoss - 12-14-2005, 09:46 AM
[No subject] - by tamilini - 12-14-2005, 11:59 AM
[No subject] - by Thala - 12-14-2005, 12:55 PM
[No subject] - by Thala - 12-14-2005, 12:57 PM
[No subject] - by tamilini - 12-14-2005, 01:02 PM
[No subject] - by MUGATHTHAR - 12-14-2005, 01:18 PM
[No subject] - by tamilini - 12-14-2005, 01:25 PM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 02:01 PM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 02:07 PM
[No subject] - by Mathuran - 12-14-2005, 02:46 PM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 02:52 PM
[No subject] - by Mathan - 12-14-2005, 04:31 PM
[No subject] - by kuruvikal - 12-14-2005, 06:29 PM
[No subject] - by AJeevan - 12-15-2005, 12:54 AM
[No subject] - by AJeevan - 12-15-2005, 01:02 AM
[No subject] - by pulukarponnaiah - 12-15-2005, 01:26 AM
[No subject] - by Vasampu - 12-15-2005, 02:00 AM
[No subject] - by Maruthankerny - 12-15-2005, 02:33 AM
[No subject] - by RaMa - 12-15-2005, 06:36 AM
[No subject] - by Saanakyan - 12-15-2005, 06:54 AM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 07:02 AM
[No subject] - by AJeevan - 12-15-2005, 08:10 AM
[No subject] - by kurukaalapoovan - 12-15-2005, 10:11 AM
[No subject] - by AJeevan - 12-15-2005, 03:24 PM
[No subject] - by AJeevan - 12-15-2005, 03:44 PM
[No subject] - by kurukaalapoovan - 12-15-2005, 06:00 PM
[No subject] - by Vasampu - 12-15-2005, 06:35 PM
[No subject] - by AJeevan - 12-15-2005, 09:48 PM
[No subject] - by Mathan - 12-15-2005, 10:15 PM
[No subject] - by Mathan - 12-15-2005, 10:26 PM
[No subject] - by kurukaalapoovan - 12-15-2005, 10:28 PM
[No subject] - by AJeevan - 12-15-2005, 10:42 PM
[No subject] - by Vasampu - 12-15-2005, 11:20 PM
[No subject] - by mohandoss - 12-16-2005, 08:28 AM
[No subject] - by அருவி - 12-16-2005, 10:50 AM
[No subject] - by mohandoss - 12-16-2005, 11:06 AM
[No subject] - by mohandoss - 12-16-2005, 11:11 AM
[No subject] - by அருவி - 12-16-2005, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)