Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணவரும் மனைவியும் பணமும்
#1
கணவரும் மனைவியும் பணமும்

பல்வேறு குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் தோன்று வதற்கு பணம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. பணம் சம்பாதிப்பதில் பிரச்சினை ஏற்படாத குடும்பங்களில் கூட சம்பாதித்த பணத்தை எப்படி எதுஎதற்கு,எவ்வளவு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் தோன்றிவிடுகிறது. கணவனும் மனைவியும் பணவிஷயத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.

கணவனும் மனைவியும் ஏதாவது மனநெருக்கடிகளிலோ, பிரச்சினைகளிலோ சிக்கி இருக்கும் போது பணவிஷயங்கள் பற்றி பேசுவதைத் தவிர்க்கவேண்டும். மனஅமைதி யுடன் நடந்து செல்லும்போதோ, மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலோ பணவிஷயங்கள் பற்றிப் பேசி, தேவைப்படும் செலவுகளுக்கு பட்ஜெட் போட்டுக்கொள்ளவேண்டும். கண வர் அவசர அவசரமாக எங்கேயாவது கிளம் பிக்கொண்டிருக்கும் நேரத்தில் முடிந்த அளவு பணவிஷயங்கள் பற்றி பேசுவதையோ- பணம் கேட் பதையோ தவிர்க்கவேண்டும். ஆண் களது பாக்கெட்டிலும், வீட்டில் பெண் களின் கைகளிலும் எப்போதும் பணம் இருக்கவேண்டும். எந்தநேரத் தில் பணம் எப்படி தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. அத் தகைய தேவைகளை ஈடுசெய்யும் விதத்தில் இருவரது கைகளிலும் பணம் இருப்பது நல்லது.

திருமணமாகி கணவர் வீட்டிற்கு வாழவரும் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அதை எல்லாம் புகுந்த வீட்டில் உள்ள அனைவரி டமும் பறைசாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படி பறைசாற்றுவது பல நேரங்களிலும் பிரச்சினைகளுக்கு காரணமாகி விடும். அதுபோல் கணவர் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகள் பற்றி பிறந்த வீட்டிலும் பெண்கள் குறிப்பிடவேண்டியதில்லை. பொதுவாகவே எல்லா நடுத்தர குடும்பங்களிலும், ஏழை குடும்பங்களிலும் பணப்பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கும். இதில் கணவரிடம் ஏற்படும் விவாதத்தை அக்கம் பக்கத்து வீட்டினரிடமோ, பிறந்த வீட்டிலோ மனைவியானவள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கணவரோ,மனைவியோ தான் பணத்தை செலவு செய்யும் முறைதான் சிறந்தது என்று வாதிடக்கூடாது. கணவர் பணத்தை செலவு செய்யும் முறை மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும். பெரிய அளவில் குழந்தை களுக்காகவோ, கணவர் அல்லது மனைவியின் குடும்பத் திற்காகவோ பணத்தை செலவு செய்யும்போது கணவர் மனைவி இருவருமே அதைப்பற்றி நன்றாக பேசி, சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். `எனக்குத் தெரியாமல் நீங்களே செலவு செய்து தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டீர்களே' என்பது போல் பேசும் நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது.

பெற்றோர் பணவிஷயங்கள் பற்றி பேசும் போது ஒரளவு பக்குவப் பட்ட குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்வதில் தவறில்லை. அவர்களுக்கும் குடும்பத்து பொருளாதார நிலை தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தால், அதை குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குழந்தைகளுக்கு எல்லா பொருட்கள் மீதும் ஆசை ஏற்படும்.

தேவைப்படும் பொருட்களையும் அவர் கள் கேட்பார்கள். தேவைப்படாத பொருட்களையும் அவர்கள் கேட் பார்கள். பணம் பெற்றோரிடம் அதிகம் இருக்கிறதே அவர்கள் எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தால் என்ன என்ற கோணத் தில் சிந்திக்கத் தொடங்கிவிடு வார்கள். அப்போது அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுக்காவிட்டால், பெற்றோரிடம் சண்டை போடுவார்கள். அதனால் குழந்தைகளின் பக்குவத்திற்கு தக்கபடியே அவர்களிடம் பணவிஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அதை தங்கள் உறவினர்களிடம் கூறவேண்டும் என்பதில்லை. மனைவி அந்த பணத்தை தன் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து வைக்கலாம் என்று ஆலோசனை சொல்வது சரியல்ல.

கணவரும் அதை தனது குடும்பத்தில் உள்ள உறவினர்களிடம் கொடுத்து வைக்கவேண்டும் என்று கூறுவதைத் தவிர்த்து, அந்த பணத்தை பாதுகாப்பாக பேங்கில் போட்டு வைப்பதே சிறந்தது. கணவருக்குத் தெரியாமல் மனைவியும் மனைவிக்குத் தெரியாமல் கணவரும் பணத்தை சேமிப்பதும் செலவழிப்பதும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

Thanks:Thanthi........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
கணவரும் மனைவியும் பணமும் - by SUNDHAL - 12-06-2005, 04:35 PM
[No subject] - by RaMa - 12-07-2005, 08:16 AM
[No subject] - by shanmuhi - 12-07-2005, 01:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)