Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படிப்போகுது ஜெயா 'ஆட்சி.....!'
#4
யானை இப்படியும் பிளிறுகிறது...எல்லாம் சிங்கத்தின் மேலான விடுவாசமோ...அப்பதானே ஒவ்வொரு வழக்கா வெளிவர வெளிவர பாராட்டுப் பறந்து வரும்....சுத்துமாத்தான உலகமடா... ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனுக்கு பாராட்டுறான்......இதுகள் எல்லாம் இருந்தால் அமெரிக்க சி ஐ ஏ சொன்னது போல 2015இல் இந்தியா பிராந்திய வல்லராசாவது கனவுதானோ...என்னவோ....!

இதையும் தான் கொஞ்சம் வாசியுங்கோவன்...

விடுதலை புலிகளை எச்சரிக்க வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கோரிக்கை

சென்னை:

தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரும்,இலங்கை மீனவர்களும் அடிக்கடி, தமிழக மீனவர்களை கடத்திச் செல்வதைத் தடுக்கக் கோரி பலமுறை தங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த 16ம் தேதியும் கடிதம் எழுதியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தியதாகத் தகவல் வெளியானது. ஆனால் அந்த மீனவர்கள் திரும்ப வந்த பிறகு, அவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் என தெரியவந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியுள்ளது, தமிழக பாதுகாப்புக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இந்தியாவின் இறையாண்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழக மீனவர்களை கடத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

மன்னார் வளைகுடாப் பகுதியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டு ரோந்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

News from Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tharma - 12-06-2003, 06:18 AM
[No subject] - by Paranee - 12-07-2003, 09:41 AM
[No subject] - by kuruvikal - 12-07-2003, 09:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)