12-06-2005, 02:25 PM
<b>'சிறிலங்கா அரசுக்காக தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைத்த முக்கிய நபர்தான் கொல்லப்பட்ட இனியபாரதி' </b>
சிறிலங்கா அரசினது அரசியல் லாபங்களுக்காக தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைத்த முக்கிய நபர்தான் இன்று செவ்வாய்க்கிழமை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட இனியபாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் முக்கியமாக சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரால் கிழக்கில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட நபராகவும் இருந்தவர் இனியபாரதி.
2004 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கொழும்பில் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் ஜே.வி.பி.யினருக்கு ஆதரவான பிக்கு ஒருவரின் விகாரையில் இனியபாரதி தங்க வைக்கபட்டிருந்தார். கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இருந்ததோடு சிறிலங்கா புலனாய்வுத்துறையின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்தார்.
2004 ஆம் ஆண்டு மே மாதமளவில் கிழக்கில் தாக்குதலை மேற்கொள்ள இனியபாரதி உள்ளிட்ட சிலரை பொலநறுவையிலுள்ள விகாரையில் சிறிலங்கா புலனாய்வுத்துறை பாதுகாத்து வைத்திருந்தது. இந்தத் தகவலை அறிந்த பொதுமக்கள் சிலர், சிறிலங்கா காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இனியபாரதி உள்ளிட்டோரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட இனியபாரதி கொழும்பில் கருணாவின் பிரதிநிதியாக சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளில் செயற்பட்டு வந்தார். கருணாவுடனான ஏனையவர்களின் தொடர்புகளுக்கான நபராகவும் இனியபாரதி செயற்பட்டார்.
சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் முயற்சியில் ஒரு கட்சியை ஏற்படுத்த ஈ.என்.டி.எல்.எஃப். குழுவுடனான கருணாவின் தொடர்பாளராக இனியபாரதி இயங்கினார். ஈ.என்.டி.எல்.எஃப். முக்கிய செயற்பாட்டாளர்களான இராஜரத்தினம், ரங்கப்பா மற்றும் விஜயன் ஆகியோர் உயிரிழந்ததையடுத்து ஈ.என்.டி.எல்.எஃப். செயலிழந்தது.
இதனால் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கான சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் முக்கிய செயற்பாட்டாளராக இனியபாரதி அனுப்பப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் பல படுகொலைகளைச் செய்த இனியபாரதி, மட்டக்களப்பில் உள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கேட்டல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
அதேபோன்று கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே பதற்றத்தைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் கட்டளைக்கு ஏற்ப இணைந்து பங்காற்றினார்.
கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைக்காக சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரால் திட்டமிடல்களுக்கு இனியபாரதி செயல்வடிவம் கொடுத்துவந்தார்.
சிறிலங்கா புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்படும் முஸ்லிம் செயற்பாட்டாளர் ஒருவருடன் இனியபாரதி வாகனத்தில் பயணம் செய்த போது அம்பாறையில் இனியபாரதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
புலனாய்வுத்துறையின் அழுத்தத்தை மீறி மேற்படி இருவரும் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட போது, இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு பின்னர் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குச் சிறைகளில் பாதுகாப்பின்மையைக் காரணம் காட்டி தென்னிலங்கைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட இனியபாரதி மீண்டும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையால் கிழக்கிற்குக் கொண்டுவரப்பட்டு அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தமிழ்-முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டார்.
சிறையில் இருப்பதாகக் கருதப்பட்ட இனியபாரதி சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியான சந்திவெளிப் பகுதியில் பகிரங்கமாகச் செயற்படுமளவிற்கு புலனாய்வுத்துறையால் பாதுகாப்பும் தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவினது அதிரடிப்படை, இராணுவ முகாம்கள் போன்றவற்றினால் பயன்படுத்தப்பட்டு வந்த இனியபாரதி தீவுச்சேனை முகாமிலிருந்தும் செயற்பட்டு வந்தார்.
தீவுச்சேனை முகாமை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆதாரமாக நிரூபித்த போது, கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்களுக்குத் தொலைபேசி மூலமான கொலை அச்சுறுத்தலை விடுத்ததும் இனியபாரதிதான். இக் கொலை அச்சுறுத்தலையடுத்து கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் இருவரும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவைச் சீர்குலைக்க சிறிலங்காப் புலனாய்வுத்துறை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளில் முக்கியமானவராகச் செயற்பட்டு வந்த இனியபாரதியே முஸ்லிம் மக்கள் மீதான கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முஸ்லிம் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் மேற்கொண்டு வந்தவர் என்பதும் இனியபாரதி கொல்லப்பட்ட சம்பவமானது முஸ்லிம் மக்களுக்கு பெரும் நிம்மதியைத் தரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
http://www.eelampage.com/index3.php?cn=22299

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>