12-06-2005, 02:17 PM
[b]பள்ளிவாசல் தாக்குதல் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு நாங்களே பொறுப்பு: புலிகளிடம் சரணடைந்த ஆயுதக் குழுவினர் தகவல்!!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 18:42 ஈழம்] [ம.சேரமான்]
கிழக்கில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்களே பொறுப்பு என்று விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுவைச் சேர்ந்த இருவர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவைச் சேர்ந்த 4 பேரை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கி சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தாக்குதலின் போது ஞானதீபன், புகழ்வேந்தன் என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த இருவர், விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தயாமோகன் மேலும் கூறியுள்ளதாவது:
அம்பாறை பிரதேசத்தில் அண்மைய முஸ்லிம் மீதான தாக்குதல்களுக்கு இனியபாரதிதான் காரணமாக இருந்துள்ளார் என்று சரணடைந்த இருவரும் தெரிவித்துள்ளனர். இன்றையத் தாக்குதலில் இனியபாரதி கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பள்ளிவாசல் மீதான தாக்குதலையும் இந்தக் குழுவினரே மேற்கொண்டதாக சரணடைந்த இருவரும் கூறியுள்ளனர்.
அம்பாறையில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான பன்னலகமவில் உள்ள சிறிலங்காவினது விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து இந்த ஆயுதக்குழுவினர் இயங்கி வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
சரணடைந்த ஞானதீபனும் புகழ்வேந்தனும் விரைவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்குவார்கள் என்றார் தயாமோகன்.
www.puthinam.com

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>