12-07-2003, 09:43 AM
aathipan Wrote:எமது மக்கள் இந்திய என்றதும் எதிரிநாடு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு இந்தியா அரசியல்வாதிகள் தான் காரணம். உண்மையில் மக்களுடனான உறவு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சில பல விடயங்களில் இந்தியா ஒரு மாதிரித்தான் நடந்து கொள்கிறது. இருந்தாலும் எமது மக்கள் நிச்சயமாக ஒரு அமைப்பபை ஏற்படுத்தி இங்கு வந்து வேண்டிய தொழில் நுட்பத்தைக்கற்றுக்கொள்ளாலாம். எந்த சம்பத்ந்தமும் இல்லாத சிங்களவர்கள் எல்லாம் வந்து இங்கே தொழில்நுட்பத்தை கற்றுச் செல்கின்றனர். ஏன் எமது மக்கள் பயன்பெறக்கூடாது. பழைய காயங்களை இனி மறந்துவிடுங்;கள். பழிக்குப்பழி ஆகிவிட்டது.
உங்கள் வளர்ச்சிக்கு இந்தியதமிழர்கள் உதவுவார்கள். நீங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்கீழ் உதவியைக்கோரலாம். பயன்பெறலாம். சும்மா கிடைத்தால் எதற்கும் மதிப்பு இல்லை. நிச்சயமக இதற்கு பணம் செலவுசெய்யவேண்டித்தான் இருக்கும்.
நாமும் இதையே சிந்தித்தோம்...எமது நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது நாம் இதைச் சொன்னோம். நீங்கள் களத்தில் அதே பொருளில் குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றிகள்...கவனிக்கத் தக்க விடயம்....!சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா.....????!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

