Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உடுக்கடித்து சாம்பராணி போட்டே
#1
உடுக்கடித்து சாம்பராணி போட்டே சந்திரிகாவை வெளியேற்ற வேண்டியிருந்ததாக கூறுகிறார் மேதானந்த தேரர்

ரணிலுக்கு பற்பாட்டு பாடியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார்

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பன்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து உடனடியாக வெளியேறுவேனென்று உறுதியளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவை ்உடுக்கடித்து சாம்பராணி புகைீீ போட்டுத்தான் வெளியேற்ற வேண்டிய நிலை உருவாகியது என்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான எல்லாவெல மேதானந்த தேரர்.

கொழும்பல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

்இதனைத்தான் சொல்வது பதவி ஆசையென்றுீ, பதவி துறந்தவுடன் வெளியேறவில்லை சந்திரிகா, புகை போட்ட பன்னர் தான் சந்திரிகா வெளியேறினார்.

பதினொரு வருட காலங்கள் ஜனாதிபதி பதவி வகித்த சந்திரிகா என்ன செய்தார்? ரணிலின் சமாதான நாடகத்திற்குப் பன்னால் இருந்து கொண்டு பற்பாட்டுப் பாடினார். அதைவிடுத்து, எந்த நன்மையும் செய்யவில்லை. இங்கிலாந்தில் மாளிகைகள் வாங்கி சுகபோகம் அனுபவிப்பதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டார்.

சட்டரீதியாக ஓய்வுபெறும் ஜனாதிபதிக்கு என்னென்ன சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமோ அதனை சந்திரிகாவுக்கு வழங்குவதை ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதனையும் மீறி சலுகைகளை வழங்கினால் எதிர்ப்போம்.

குண்டு துளைக்காத 4 கார்கள் உட்பட 36 வாகனங்கள், 280 பாதுகாப்பு அதிகாரிகளென சுகபோக வாழ்க்கைக்கும் தான் அனுபவித்த வசதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லாமல் சந்திரிகா அனைத்தையும் கேட்டுள்ளார்.

இதற்கான செலவை யார் ஏற்பது? பொது மக்களின் வரிப்பணத்திலேயே இது வழங்கப்படுகிறது. சட்டத்திற்கு மீறிய வசதிகள் வழங்குவதை நாம் எதிர்க்கின்றோமென்றும் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

தினகுரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உடுக்கடித்து சாம்பராணி போட்டே - by Vaanampaadi - 12-06-2005, 12:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)