Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி-தமிழ்/முஸ்லிம் உறவு மீது
#2
<b>சிங்களப் பேரினவாத சதிவலைகளில் வீழ்ந்து குழப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம். – தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு.மாவட்ட அரசியல்துறை வேண்டுகோள்- </b>


காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பழீல் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழைப் பேசுகின்றவர்களும் வடகிழக்கில் வாழ்பவர்களுமான சிறுபான்மையினரிடையே வேற்றுமைகளை உருவாக்குவதும் அச்சமூகங்களின் மத்தியிலே முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதும் பேரினவாதச் சக்திகளின் வழக்கமான சதிகளில் ஒன்றாகும். பெரும்பான்மையினரால் மறுக்கப்படுகின்ற உரிமைகளை மீட்டெடுப்பதற்காக வடகிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசுவோர் கொடுத்த விலையும் அனுபவித்த துன்பங்களும் அநேகம்.

அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தவும் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று திரிபுபடுத்தவும் பெருமுயற்சி செய்கின்ற பேரினவாதிகளும் அவர்தம் அடி வருடிகளும் பின்னுகின்ற சதிவலையில் இனியும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் சிக்கி விடக்கூடாது. எமது போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரே மொழி பேசுகின்ற சகோதரரிடையே வேற்றுமையை விதைப்பது பேரினவாதச் சிந்தனையின் உத்திகளில் ஒன்று என்பதைக் கடந்த காலங்களில் நாம் நன்று அனுபவித்திருக்கிறோம். அதிலிருந்து கற்றுக்கொண்டும் இருக்கிறோம்.

முதிர்ச்சியடைந்த மனோநிலையில் சிந்தித்துத் செயலாற்றவேண்டிய இந்தக் கட்டத்தில் எவரும் உணர்ச்சிவசப்படுவதோ பின்னணிகளை ஆராயாமல் பதில் நடவடிக்கைகளில் இறங்குவதோ விவேகமல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். இளைஞர்களிடையே பதற்றத்தை உண்டாக்கக்கூடிய வதந்திகளையும் துண்டுப் பிரசுரங்களையும் உலவவிடுவதன் மூலம் கடந்து வந்த இருண்ட நாட்களை நோக்கி எமது சமூகங்களை மீண்டும் இட்டுச் செல்ல நினைக்கிறது பேரினவாதம். அவ்வாறான கொடிய விளைவுகளால் இலாபம் பெறுவது பேரினவாதமே தவிர வேறு யாரும் அல்ல என்பதை நாம் அனைவரும் உணரும் பக்குவம் பெறவேண்டும்.

ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் வாழ்ந்து ஒரே விதமான தொழில்துறைகளுக்குள் அடையாளப்பட்டுக்கிடக்கும் நாம் பிரிந்து நிற்க வேண்டும் என்று காரணங்களைத் தேடுவதில் சில அரசியல் வாதிகள் இலாபமடையலாம். ஆனால் நமது எதிர்காலச் சந்ததிக்குச் நாம் பிணக்குகளை மட்டுமா விட்டுச்செல்லப்போகிறோம் என்பதை மூத்த தலைமுறையினர் சிந்தித்து ஆலோசனை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சேர்த்து வைத்த உறவுகளைச் சிந்தவிடுவது எவருக்குமே நல்லதல்ல. நாம் அனைவரும் ஒன்றாகவே இருந்தாக வேண்டியவர்கள் என்பதை இளைய தலைமுறைக்கு விளக்க வேண்டும் எனவும் வேண்டி நிற்கிறோம்.

காத்தான்குடியில் கடந்த 02ம் திகதி நடந்த சம்பவத்தில் காயமடைந்து பின்பு மருத்துவ மனையில் உயிரிழந்த சகோதரர் ஏ.எல்.எம் பழீல் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். பேரினவாதத்தின் சதிக்கொலைகளில் நாம் இழந்துவிட்ட பல்லாயிரம் சிறுபான்மை உயிர்களோடு இன்று பழீலின் இழப்பும் ஒன்றாகிறது.

மிகவும் அநாகரிகமான இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். போரா? சுமாதானமா? என்ற கேள்வி தமிழ்பேசும் மக்களின் மத்தியிலே உச்சம் பெற்றுநிற்கும் இந்தக் கட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற பெரும் சதிகளை பேரினவாதிகள் மென்மேலும் செய்யக்கூடும். அந்த வலைகளில் விழுந்து குழப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என அனைவரையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல்துறை, மட்டக்களப்பு.

<b>தகவல்மூலம்; மட்டக்களப்பு ஈழநாதம்</b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 12-06-2005, 04:31 AM
[No subject] - by மேகநாதன் - 12-06-2005, 04:39 AM
[No subject] - by MUGATHTHAR - 12-06-2005, 05:30 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 05:40 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:06 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:11 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:13 AM
[No subject] - by மேகநாதன் - 12-09-2005, 07:56 AM
[No subject] - by மேகநாதன் - 12-11-2005, 01:30 PM
[No subject] - by மேகநாதன் - 12-11-2005, 01:48 PM
[No subject] - by மேகநாதன் - 12-12-2005, 05:29 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:13 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 10:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 11:48 AM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:49 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 01:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:40 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:53 PM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:09 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)