12-06-2005, 01:17 AM
Quote:ஆயுதங்கள்தானே யாழ்குடாநாட்டில் இறைந்து கிடக்கிறதுஇ பதுக்கி வைத்தவை எட்டப்பர் விட்டுவிட்டு ஓடியவை இப்படிஏராளம் இருக்கிறதுஇ ஒருபகுதி மறைத்துவைத்தவர் உயிருடன் இல்லாததால் துருப்பிடித்துப்போகின்றன
கடந்த சில மாதங்களாகக் குடாநாட்டில் வலுத்துக் காணப்பட்ட ஊர்ச்சண்டைகளின்போது சரமாரியாக துப்பாக்கிகள், கை எறிகுண்டுகள் போன்றன பாவிக்கப்பட்டன. இவ்வாறு நடந்த ஆயுதம் சகிதமான மோதல்களில் பல தமிழர்கள் படுகாயமடைய சிலர் இறக்கவும் நேரிட்டது.
அப்போது அது குறித்துக் கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட அரசியற் துறையினர் 'இந்த ஆயுதங்கள் வெடிகுண்டுகள் மக்களிடம் சிறிலங்கா புலனாய்வாளர்கள் மூலம் கொண்டுபோய்ச்சேர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் குரோதங்கள் கிளறி விடப்படுவதாகக்' குற்றம் சாட்டியிருந்தார்கள்.
ஈழநாதம் பத்திரிகையும் மேற்படி விடயம் குறித்துப் பலதடவைகள் பல்வேறு கட்டுரைகள் வாயிலாகக் கோடிகாட்டியிருந்தது.
அதுஅவ்வாறிருக்க நேற்றையதினம் பி.பி.சி தமிழோசைக்கு யாழ்மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பருதி அவர்கள் வழங்கிய செவ்வியின்போது 'கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளால் மக்களிடம் சட்டவிரோதமான முறையில் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை அவர்கள் தற்போது அப்படைகளுக்கு எதிராகவே பாவிக்கிறார்கள்" என்ற கருத்துப்படக் கூறியிருக்கிறார்.
இந்த விடயங்களும் இந்த இடத்திலே மனங்கொள்ளத்தக்கன என்பதால் இங்கே குறிப்பிட விழைந்தேன்.
கீழே தினக்குரல் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த கட்டுரையின் சில பகுதிகளைத் தருகிறேன். கட்டுரையின் முழு வடிவம் பின்வரும் இணைப்பில் காணலாம்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6417
<b>நன்றி:</b> முகத்தார்
Quote:இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் கருணா குழு என்ற போர்வையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள படைத் தரப்புக்கு அவ்வாறானதொரு திட்டத்தை குடாநாட்டில் அரங்கேற்ற முடியவில்லை. இதையடுத்துஇ மாற்று வழி தேடிய அவர்களுக்கு இப்போது 'சாதி' என்ற ஆயுதம் கிடைத்துள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் செத்தொழிந்த சாதி வெறியை மீண்டும் உயிர்ப்பித்து நடமாடவிடும் நடவடிக்கையில் இறங்கிய படைத்தரப்புக்கு வேலை வெட்டியின்றி வெளிநாட்டுப் பணச் செழிப்புடன் தெருச் சுற்றும் காவாலிக் கூட்டமான இளைஞர் குழுக்கள் ஏவுதல் கருவிகளாகக் கிடைத்துள்ளன.
இவ்வாறான நாசகாரக் கும்பல்களுடன் நட்புறவு பாராட்டும் படைத்தரப்பு இக்கும்பல்கள் புரியும் அட்டகாசங்கள் குற்றச் செயல்கள் தொடர்பில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
குடாநாட்டில் அண்மைக் காலமாக பல கோஷ்டி மோதல்கள் ஊர்ச் சண்டைகள் இடம் பெற்று உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போது கூட படைத்தரப்பு இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. <b>அண்மையில் கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊர்ச் சண்டைகளில் துப்பாக்கிகள் கிரனைட்டுகள் பாவிக்கப்பட்டமை இக் குழுக்களின் பின்னணியில் படைத்தரப்பு இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது. </b>
படைத் தரப்புடன் சேர்ந்தியங்கும் சில தமிழ்க் குழுக்கள் கூட தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமது சொந்த ஊர்களில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் இருப்புக்கு பலமான அத்திபாரமிட்ட சாதிவெறி ஒழிப்பை தகர்த்தெறிந்து மீண்டும் சாதிவெறியைத் தூண்டும் முயற்சியில் படைத் தரப்புடன் இவ்வாறான வன்முறைக் கும்பல்கள் கைகோர்த்துள்ளமை மிகவும் அபாயகரமானது. இதன் விளைவுகள் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான நிலையில் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் குழுச் சண்டைகள் அபாயகரமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. <b>கத்தி வாள் பொல்லுகளுடன் மோதியவர்கள் இன்று கட்டுத் துவக்கு இயந்திரத் துப்பாக்கிகள் கிரனைட்டுகளைக் கொண்டு மோதுமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.</b>
கடந்த சில வாரங்களாக வலிகாமத்தின் சில பகுதிகளிலும் தென்மராட்சியில் கொடிகாமம் பகுதியிலும் இடம்பெற்ற குழுச் சண்டைகள் நிலைமையின் விபரீதத்தை நன்குணர்த்தியுள்ளன.
<b>இக் கிராமங்களுக்கிடையிலான மோதல்கள் ஆங்கிலப் படப் பாணியிலேயே நடத்தப்பட்டதுடன் இயந்திரத் துப்பாக்கிகள் கிரனைட்டுகளும் பயன்படுத்தப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</b> மறைந்திருந்து தாக்குதல் அதிரடியாகப் புகுந்து தாக்குதல் தனிமைப்படுத்தி தாக்குதல் இலக்கு வைத்துத் தாக்குதல் தாக்குதலின்போது சிறைப்பிடித்தல் போன்ற பல வியூகங்கள் இம் மோதல்களின்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.
இவ்வாறு மோதல்கள் மிக மோசமாக நடந்த போதும் படையினரோ பொலிஸாரோ இது விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை. <b>அதேவேளை இளைஞர் குழுக்களின் கைகளில் துப்பாக்கிகள் கிரனைட்டுகள் போய்ச் சேர்ந்தமையும் இம் மோதல்களின் பின்னணி சக்திகள் குறித்த ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.</b>
இதேவேளை பொது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வன்முறைகளைத் தூண்ட எதிரிகளும் எதிரிகளுக்குத் துணைபோகும் துரோகிகளும் முயற்சிப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
<b>நன்றி :</b> தினக்குரல்
<b>அன்புடன் திரு</b>

