12-06-2003, 09:11 PM
AJeevan Wrote:இங்கே (புலத்தில்) ஓரு நிகழ்ச்சியை தயாரிக்க கொடுக்கும் பணத்தில் , ஒரு நாள் புரோகிறாமையே வாங்கி விடலாம் என்று சொன்னவர்கள் இப்போதுதான் கன்னத்தில் கை வைத்து தடவுகிறார்கள்.
இப்போது அழுவதெல்லாம் , சாவுக்கு வைக்கும் ஒப்பாரியே தவிர வேறெதுவுமில்லை.
இந்திய தொலைக் காட்சிகள் வந்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். அவர்களது திட்டமிடல் , தொலை நோக்கு அவர்களை இந்தளவுக்கு வளர்த்திருக்கிறது.
ஆனால் நம்மவர் தொலை நோக்கு , யார் மீதாவது பழிகளை போட்டுக் கொண்டே , குளிர் காய நினைப்பது.
எந்த நாட்டு நிகழ்ச்சிகளை வாங்கினாலும், தமக்கென சொந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காத எந்த ஊடகமும் நிலைக்காது. (டெலிபோன் நிகழ்ச்சிகள் அல்ல. அதைச் செய்ய வானோலி போதும். அதற்கு ஏன் ஒரு தொலைக் காட்சி?)
அஜீவன் உங்கள் ஆதங்கம் நியாயமானது.
ஆனால் அம்மாவை ஒருவன் கொலைசெய்ய வரும்போது அம்மா எனக்கு முந்தி அடிச்சவா அதாலை எனக்குக் கவலையில்லையென்று இருக்க முடியுமா ?
என்றோ ஒருநாள் பொருளாதார பலமின்மையால் அல்லது எமது கலைஞர்களின் அருமை தெரியாது இருந்த எமது ஊடகம் சொன்ன ஒரு வார்த்தையை இன்று து}க்கி வைத்து அன்று அப்படிச் சொன்னார்கள் இன்று அவர்களை எதிர்ப்பதோ அல்லது அழியட்டும் என்று விட்டுவிடுவது எமது ஊடகத்துக்கு நாமே வேட்டுவைக்கும் நிலமையாகத்தான் பார்க்க முடிகிறது.
ரீரீஎன்னில் தற்போது பல புதிய நிகழ்ச்சிகள் சொந்தத் தயாரிப்பாக வருகிறது. ஆனால் அதை எம்மவர்கள் ஏனோ கவனிக்கிறார்களில்லை. எங்கள் மழலைகளின் நிகழ்ச்சியைவிட தென்னிந்திய ஊடகங்களில் வருகின்ற குழந்தைகளின் நிகழ்ச்சிகளைத்தான் அச்சா , ஆகா ஓகோ என்கிறார்கள்.
இந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தொலைபேசி நிகழ்ச்சிகள் இல்லையா ?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

