12-05-2005, 03:25 PM
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி கூறியுள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.
இந்தத் தாக்குதல்களுக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவினர் எங்களிடம் கேட்டனர். யாழ். குடா நாட்டில் எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் இல்லை. சிறிலங்கா இராணுவத்தினர் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இந்தத் தாக்குதலை நாம் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.
யாழில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு நாம் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று முற்றாக நாம் மறுத்திருக்கிறோம்.
அந்தப் பகுதியில் இராணுவ வன்முறைகள் அதிகரித்திருப்பதால் ஆத்திரமடைந்த மக்களே இத்தகையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று கூட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்களது மகிழ்ச்சியான கற்றலுக்குத் தடை விதிக்கும் வகையில்- மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை முற்றாகக் கெடுக்கும் வகையில் ஒரு இராணுவ அரண் அமைக்கப்பட்டது.
அதற்கு எதிராக மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் குண்டாந்தடிப் தாக்குதல்இ கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு உயிர்க்கொலைகளை ஏற்படுத்துகிற வகையிலான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகளினால் மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழ வேண்டிய சந்தர்ப்பமும் சூழலும்தான் ஏற்படும்.
எங்களுடைய மக்களைப் பாதிக்கின்றஇ மக்களைப் படுகொலை செய்கிற நிகழ்வுகளை மேற்கொள்ளாமல் இயல்பாகவே எம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளோம் என்றார் இளம்பரிதி.
நன்றி: புதினம்.

[size=14] ' '