12-05-2005, 08:57 AM
முகமாலையில் விடுதலைப் புலிகள் - படையினர் இன்று சந்திப்பு??
யாழில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தணிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்களிற்கும், சிறீலங்கா படைகளின் யாழ். மாவட்ட தளபதி சுனில் தென்னக்கோனிற்கும் இடையே முகமாலை இராணுவ சூனியப் பிரதேசத்தில் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு போர் நிறுத்த கண்காணிப்புக்குழு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்கள் சங்கதியிடம் கருத்துத் தெரிவிக்கையில்: இச்சந்திப்பு தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பு கொண்டதையடுத்து தலைமைப் பீடத்தின் முடிவைப் பெற்றுக் கொண்டு இச்சந்திப்பிற்கு தாம் இணக்கம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சந்திப்புத் தொடர்பாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரத்திற்கு மூன்று மணிநேரம் முன்பாக கொழும்பு ஊடகமொன்று யாழ். மாவட்ட சிறீலங்கா இராணுவத் தளபதி சுனில் தென்னக்கோனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இச்சந்திப்பு தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தம்மிடம் எதனையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழில் வெளிவரும் நாளேடு ஒன்று விடுதலைப் புலிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துவிட்டதாக உண்மைக்குப் புறம்மான செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த நாளேடு தம்மிடம் தொடர்பு கொண்டபோது, சந்திப்புத் தொடர்பான போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை தலைமைப் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைப் பீடத்தின் முடிவு வந்த பின்பே தாம் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>