12-05-2005, 08:28 AM
தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று விடுதலைப் புலிகளும் சிறிலங்கா இராணுவ தரப்பும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் தரப்பில் யாழ் மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளர் சி. இளம்பருதி அவர்களும், சிறிலங்கா இராணுவத்தின் பிரதிநிதியாக சிறிலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கூன் அவர்களும் முகமாலையிலுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.
இந்தச் சந்திப்பு சிறிலங்கா நேரப்படி இன்று திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பிலுள்ள விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
<b>நன்றி:</b> தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16474
<b>தமிழில்:</b> திருமகள்