Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்திகள்
#4
நாட்டுப்பற்று என்றால் என்ன? நாட்டுப்பற்றாளர்கள் என்றால் என்ன?
செங்குட்டுவன்


சிங்கள இனவாதிகள் இவற்றிற்கு எவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

நாட்டுப்பற்று என்றால், புலிகளை எதிர்த்தல், தமிழர்கள் அனைவரையும் புலிகளாகப் பார்த்தல் - நாட்டுப்பற்றாளர்கள் என்றால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமித்து, தமிழர்களின் தனித்துவ தேசியத்தன்மையை சிதைத்து நிற்பவர்கள் - என்பதே அவர்கள் கொடுக்கும் விளக்கமாகும்.

சிறிலங்காவில் நாட்டுப்பற்றினைப்பற்றி வாய்கிழியப்பேசும் - நாட்டுப்பற்றாளர்கள் எனத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொள்வோர் யார் தெரியுமா?

ஜே.வி.பியினர், சிஹல உறுமயவினர், சிங்கள புூமிபுத்திர கட்சியினர், பிக்கு பெரமுனவைச் சேர்ந்தவர்கள், மகாசங்கத்தினர்.... இப்படிப்பட்ட வகையினரே ஆவர். இவர்கள் அனைவரும் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்லாது தமிழ் மக்களின் தேசியத் தனித்துவத்தை நிராகரிப்பவர்களும் ஆவர்.

அண்மையில் சந்திரிகா ஏற்படுத்திய அரசியல் அதிரடி குழப்ப நடவடிக்கைகளின் பின்னர் இந்த நாட்டுப்பற்றாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளார்கள்.

இன்றைய நிலையில் ஒரு தேசிய அரசு அமையவேண்டியதன் அவசியம் குறித்து தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கு ஒரு தவிர்க்கமுடியாத புற அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்படி ஒன்று அமைய வேண்டிய சூழலோ, அமைக்கவேண்டிய நிர்ப்பந்தமோ தற்போதைய சனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்படின், அதைக்குழப்ப தமது அரசியல் மூலோபாயங்களை இந்த நாட்டுப்பற்றாளர்கள் வகித்து வருகிறார்கள் என்பது தெளிவாகி வருகிறது.

அண்மையில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய சிகல உறுமயத் தலைவர் திலக்கருணாரட்ண ~நாட்டுப்பற்றுள்ளவர்களைச் சேர்க்காத தேசிய அரசு என்ற ஒன்று ஒருபோதுமே வெற்றியடையாது| - என்றுள்ளார்.

தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே தென்படாத நிலையில் அதற்குள் எப்படியாவது தங்களையும் நுழைத்து விட முனையும் தன்மையே அவரது இந்த கூற்றினுள் தெரிகிறது.

தங்களைத் தாங்களே தேச பக்தர்கள் எனக்கூறிக்கொள்ளும் இவர்கள், தங்களின் தேசத்திற்கு தற்போது மிகவும் அவசியமான சமாதான முயற்சிகளை முற்றாக நிராகரிப்பவர்கள். அது மட்டுமல்லாது யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள். யுத்தம் ஒரு நாட்டை சகல வழிகளிலும் சிதைக்கும் என அறிந்திருந்தும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக அதை வலியுறுத்துபவர்கள், தம்மை தேசபக்தர்கள் எனக் கூறுவது தான் முரண்நகையான விடயமாகும்.

தேசபக்தர்களும், அவர்களின் தேசபற்றும் சிறிலங்காவில் பேரினவாத சிந்தனைக் கோட்பாடுகளின் அடித்தளத்தைக் கொண்ட அரசியல் தத்துவத்தில் இயங்குவது தான் சிறிலங்காவின் அழிவுக்கு காரணமாகவுள்ளது.


நன்றி: வெள்ளிநாதம் 05-12-03
Reply


Messages In This Thread
செய்திகள் - by Mathivathanan - 09-16-2003, 12:39 AM
[No subject] - by sethu - 12-06-2003, 10:46 AM
[No subject] - by sethu - 12-06-2003, 10:47 AM
[No subject] - by sethu - 12-06-2003, 10:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)