12-04-2005, 08:02 PM
<b>தோல்வி நிiலையென நினைத்தால்</b> எனும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நண்பரின் நினைவுகளே எனை வாட்டும். முதன் முதலில் இப்பாடல் வெளிவந்தபோது இந்தியாவிலிருந்த எனது நண்பனே உடனடியாக எனக்கு இப்பாடலை ஒலிப்பதிவு செய்து அனுப்பி வைத்தார். அப்போது இயக்க வேறுபாடுகளின்றி எல்லோராலும் இப்பாடல் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது. எனது நண்பனும் தற்போது உயிருடன் இல்லை.

